கேரட் கிரை பயன்கள் I Carrot keerai benefits in tamil

கேரட் கிரை பயன்கள் | carrot keerai benefits in tamil

carrot keerai benefits in tamil கேரட் கிரை பயன்கள் கீரையில் 51 விழுக்காடு உண்ணும் தகுதி பெற்றவை. இவற்றில் 76.6 விழுக்காடு நீரும், 5 விழுக்காடு புரதச் சத்தும், 0.5 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 2.8 விழுக்காடு தாது உப்புகளும், 1.D விழுக்காடு நார்ச்சத்தும் , 13.1 விழுக்காடு மாவுச் சத்தும் நிறைந்திருக்கின்றன. இது 77 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது.

நூறு கிராம் கீரையில் 300 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 110 மில்லிகிராம் மணிச்சத்தும், 0.3 மில்லிகிராம் இரும்புச் சத்தும் இருக்கின்றன. இக்கீரையில் உயிர்ச்சத்துகள் மிகுதியாக உள்ளன. உயிர் சத்துகளில் ஒன்றான வைட்டமின்ன, 9600அனைத்துலக இலககொண்டது இக்கிரை.

நூறு கிராம் கீரையில் தயாமின் 0.04 மில்லிகிராம் இருக்கிறது. ரைபோஃளேவின் 0.20 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 0.6 மில்லி கிராமும், வைட்டமின் சி 79 மில்லி கிராமும் அடங்கியிருக்கின்றன.

carrot keerai benefits in tamil – கேரட் கிரை பயன்கள்

கேரட் கீரை நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. கேரட் கீரை முடக்கு வாதத்திற்கு ஒரு சிறந்த மருந்தாகும். முடக்கு வாதத்திற்கு உட்பட்டவர்களின் உடலிலுள்ள நோய் பாதிப்புக்கு ஆளாகாத உறுப்புகளை இக்கீரை வலுப் படுத்துகிறது.

இரத்தத்தைப் பெருக்க வைப்பதில் இக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட் கீரை, முள்ளங்கிக் கீரை மற்றும் பீட்ருட் கீரை முதலியன இரத்த விருத்திக்குப் பயன்படுபவைகள்.

உடலின் இரத்தத்திலுள்ள நச்சுத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. இக்கீரையின் கஷாயம் பிரசவத்திற்குப் பிறகு கருப்பையைச் சுருங்க வைக்கும் தன்மையைப் பெற்றது. வயிற்றில் ஏற்படும் புண்களுக்கு இந்தக் கேரட் கீரை ஒரு சிறந்த மருந்தாகும்.

இக்கீரையைப் பச்சையாக வாயிலிட்டு மென்று பல்துலக்க பல் ஈறுகள் வலுப்பெறும். இவ்வாறே முதிர்ந்த கீரையின் பூத்த நிலையிலுள்ள தண்டுகளைப் பல் விளக்கும் பல் குச்சியாகப் பயன்படுத்தலாம். இவைகள் பல்லுக்கு வலுவூட்டி பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு, ஈறு வீக்கம் முதலிய நோய்களைக் குணப்படுத்தும். அன்றியும் பற்களை முத்துப் போன்று வெண்மை நிறமாக மாற்றும். இக்கீரை தாதுபலத்தைக் கொடுக்கும்.

Leave a Comment