செம்பருத்தி பூவின் மருத்துவ மகிமைகள் | Semparuthi Poo Benefits In Tamil

semparuthi poo benefits in tamil : நாம் அனைவருமே இன்றைய காலங்களில் பல புதுவிதமான நோய்களால் மாட்டிக்கொண்டு அது எதனால் வந்தது எப்படி வந்தது என்று தெரியாமலே செயற்கை மருத்துவத்தை தேடி ஓடுகிறோம்.

நம்மை சுற்றி ஏராளமான இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய  மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகள் உள்ளனர். அவற்றில் ஒன்று தான் அற்புத குணம் மிக்க செம்பருத்தி பூ. இது இயற்கை தந்த பரிசு என்று தான் சொல்லணும்.

நம்மள சுற்றி நமக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான இயற்கை மருத்துவம் உள்ளது நாம் அதன் பயன் தெரியாமல் அதனை ஒதுக்கிவைக்கிறோம்.வாங்க அதனோட மருத்துவ மகிமைகளை பற்றி பார்க்கலாம்.

செம்பருத்தி பூவின் நன்மைகள் – semparuthi poo benefits in tamil

செம்பருத்தி பூ வெறும் அழகு செடியாக மட்டுமல்லாமல் மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது. சித்த மருத்துவ நூல்களில் இதனை தங்கப்பூ எனவும் தங்கபுஷ்பதுக்கு இணையாக சொல்லப்படுகிறது. இதனை செம்பரத்தை , செவ்வரத்தை , சீன ரோஜா என்று அழைக்கப்படுகிறது.

 • செம்பருத்தி பூ இருதய நோய்களுக்கு மட்டுமில்லாமல் பாலியல் தொடர்பான நோய்களுக்கும் கூட நல்ல தீர்வு கொடுக்கிறது.
 • இருதய நோயாளிகள் செம்பருத்தி பூ இதழ்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.
 • செம்பருத்தி பூ இதழ்களுடன் இரண்டு கருவேப்பிலை , இரண்டு காட்டு நெல்லிக்காய் , சிறிது இஞ்சி சேர்த்து கஷாயமாக தேன் சேர்த்து குடிக்க இருதய நோயாளிகளுக்கு வரக்கூடிய படபடப்பு நீங்கி அமைதி நிலையை அடைவார்கள்.
 • வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உஷ்ணத்தை தவிர்த்து உடம்பினை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
 • உடல் உஷ்ணத்தால் வரக்கூடிய வாய்ப்புண் , வயிற்று புண்களை சரிசெய்து உடல் வெப்பநிலையை சமநிலையை கொடுக்கிறது.
 • பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்குமே எது ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது.
 • முறையற்ற மாதவிடாய் , அதிகமான உதிரப்போக்கு , வெள்ளைப்படுதல், கருப்பையில் ஏற்படக்கூடிய நீர்கட்டிகள் போன்றவற்றுக்கு நல்ல பயனை அளிக்கிறது.
 • இந்த பிரச்சினை உள்ளவர்கள் காலையில் செம்பருத்தி இதழ்களை நெய்யில் வதக்கி அதனை சாப்பிட்டு வர கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.
 • குறிப்பிட்ட வயதில் பருவம் அடையாத பெண்களுக்கு கூட இது ஒரு நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.
 • உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்து இரத்தசோகையை சரிசெய்யவல்லது.
 • தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு , அசிடிட்டி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இதனை பாலில் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
 • மேலும் தலைமுடி வளர்ச்சிக்கும் , இளநரை போன்ற பிரச்சினைகளுக்கும் இது ஒரு அருமருந்தாக இருக்கிறது.
 • சளி , இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு அருமருந்தாக பயனளிக்கிறது.
 • செம்பருத்தி இதழ்களுடன் இரண்டு அல்லது மூன்று ஆடு தொடா இலைகளை சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிடுவது வறட்டு இருமலை சரிசெய்யும்.
 • இரத்த அழுத்தத்தை சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் செம்பருத்தி டீயை அருந்திவர இருதயத்துக்கு நல்ல பயன் அளிக்கிறது.

தலைமுடி வளர செம்பருத்தி பூ – semparuthi poo benefits in tamil

பொதுவாக இன்றைய முக்கிய பிரச்சினை தலைமுடி பிரச்சினை தான், அதை சரிசெய்வதில் செம்பருத்தி பூ முக்கிய பங்கு ஆற்றுகிறது.சிலருக்கு உடல் சூடு காரணமாக தான் தலை முடி உதிர்வு , பொடுகு பிரச்சினை ஏற்படுகிறது.

அதை தவிர்ப்பதற்கு செம்பருத்தி இதழ்களை ஒருகைப்பிடி அளவு எடுத்து அதனை நன்கு காயவைத்து பின்பு சுத்தமான தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி அதனை முடி உதிர்வு உள்ள இடத்தில் தேய்த்து வர புதிய முடிகள் வளரும் ,

இளம்நரை தவிர்த்து முடி கருகருவென்று வளரும். வாரத்திற்கு ஒருமுறை செம்பருத்தி பூ இலைகளை அரைத்து பின்பு தலையில் தேய்த்து குளிப்பதனால் உடல் சூடு குறையும் தலைமுடிக்கு நல்ல மனத்தையும் கொடுக்கிறது.

செம்பருத்தி பூ முகத்திற்கு – semparuthi poo benefits in tamil 

செம்பருத்தி பூ சரும பாதுகாப்பில் கூட முக்கிய பங்கு அளிக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தான் தெரியும் என்று சொல்வார்கள் ,

முகத்தின் அழகு எல்லாருக்குமே ரொம்ப  அவசியமான ஒன்றாகும். முகம் பராமரிப்பில் இன்று நாம் என்னலாமோ செயற்கை கிரீம்களை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இயற்கைமுறையிலான செம்பருத்தி இதழ்களை பத்து அல்லது பதினைந்து இதழ்களை எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

அதில் சிறிதளவு அரிசிமாவு சேர்த்து பேஸ்பேக் போடுவதனால் முகம் பளபளக்கும், கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகான தோற்றத்தை தரும். 

செம்பருத்தி பூவின் கண்ணோட்டம் 

திணை          :      தாவரம்
வரிசை         :       மால்வேல்ஸ்
குடும்பம்      :       மால்வேசியே
பேரினம்       :       ஹைபிஸ்கஸ்
இனம்            :       ரோசா-சினென்ஸிஸ்

செம்பருத்தி பூ டீ செய்முறை – semparuthi poo benefits in tamil

தேவையான பொருள்கள் இரண்டு அல்லது மூன்று செம்பருத்தி இதழ்கள் அதனுடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் , சிறிதளவு சுக்கு , இரண்டு துளசி இலைகள் இதையெல்லாம் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும் ,

பின்பு வடிகட்டி அதனுடன் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்துவது உடலுக்கு நல்ல வலுவை கொடுக்கிறது, முக்கியமாக இருதயத்துக்கு நன்மை பயக்கிறது

Leave a Comment