புதினா மருத்துவ பயன்கள் | Pudina Healthy Benefits In Tamil 2024;

புதினா மருத்துவ பயன்கள் pudina benefits in Tamil: புதினாக் கீரையை துகையல் அரைப்பது தான் வழக்கம். அடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

புதினா சட்னி பயன்கள்

புதினாக் கீரை இதன் மணமே நம்மைச் சாப்பிட வைக்கும், சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்கும். இதில் புதினா சட்னி செய்வார்கள்.

புலவு வாசனையாக இருக்க இதனைச் சேர்ப்பார்கள். இது ஜீரண சக்தியை ஏற்படுத்தும். புதினாக் கீரையில் உயிர்ச் சத்துகளும், இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும் ஏராளமாக இருப்பதுதான் இதன் சிறப்பு.

புதினா கீரை பலவித பிணிகளை அகற்றும் அற்புத குணமுடையது. இதனை உட்கொள்வதின் மூலம் நல்ல இரத்தத்தை உற்பத்தி செய்து நோய் எதிர்ப்பு சக்திபெற்று வாழமுடியும்.

புதினா கீரையை சித்த மருத்துவத்தில் “ஈயெச்சக் கீரை” என்று கூறுவார்கள். புதினாக் கீரை கீழ்வரும் நோய்களை நலமாக்கும் வீரியம் மிக்கதாகும்.

வாந்தி, சளி, இருமல், ஆஸ்துமா, மூட்டுவலி, மஞ்சள் காமாலை, வாயுத்தொல்லை, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், மலச்சிக்கல், பசியின்மை, தோலில் வறட்டுத்தன்மை, பித்தம், நுரையீரல் நோய்கள், கல்லீரல் நோய்கள் போன்ற பல நோய்களை அகற்றும் அற்புத மூலிகையாகும்.

அபூர்வ மூலிகையான புதினாக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பலவித நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

புதினா பயன்கள் – pudina benefits in Tamil

வயிற்றுப் போக்கு

எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்று விடும்.

சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பலவகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக் கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது pudina benefits in Tamil.

தொடர் வாந்தியை நிறுத்த

புதினாக் கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர்விட்டு நன்றாகக் கொதிக்க வேண்டும் புதினா மருத்துவ பயன்கள் pudina benefits in Tamil.

அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை, மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.

கர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த கருத்தரித்த இரண்டாவது மாத முதல் கருத்தரித்து இருப்பதை மெய்ப்பிக்க, காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆகாரம் உண்டவுடன் வாந்தி வரும், தலைசுற்றல், சோம்பல், அரோசிகம் ஏற்படும்.

இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இப்படி இருக்கும். 2. 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும். சில பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி இருக்கும். ஆனால், பின் பகுதியில் ஏற்படும் வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்படும். இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது.

புதினாக் கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் போட்டு இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இரண்டு ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, களிம்பு ஏறாத ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றை விட்டு அதில் ஒரு சீசா அளவு அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை 4 கிலோ பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எடுத்து, முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதை விட்டு, அடுப்பில் வைத்து, நன்றாக காய்ச்ச வேண்டும் நுரையீரல் புண் குணமாக.

இந்த சமயம் மருந்து சர்பத் போல பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சீசாவில் விட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வாந்தி வரும் சமயம் இந்தப் பாகில் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு நாவால் அரைத் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க எந்தவிதமான வேண்டும்.

இந்த விதமாக ஒரு நாளைக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். கெடுதலும் ஏற்படாது. ரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப்பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது புதினா மருத்துவ பயன்கள் pudina benefits in Tamil.

புதினா மருத்துவ பயன்கள் 2024
புதினா மருத்துவ பயன்கள் 2024 | Benefits of Pudhina in Tamil

20 கிராம் புதினா மருத்துவ பயன்கள்

  • A  வைட்டமின் உயிர்ச்சத்து 787 மில்லிகிராமும்,
  • வைட்டமின் B1 உயிர்ச்சத்து 14 மில்லிகிராமும்,
  • வைட்டமின் B2 உயிர்ச்சத்து 23 மில்லிகிராமும்,
  • இரும்புச் சத்து 4.4 மில்லிகிராமும்,
  • சுண்ணாம்புச் சத்து 57 மில்லிகிராமும் இருக்கிறது.
  • இதன் காலரி என்னும் உஷ்ண அளவு 16 ஆகும்.

புதினாக்கீரை பெரும்பாலும் ரசக் கற்பூரம் (Menthol) தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயு கோளாறுகள், வயிற்றுப்போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும்.

புதினா சட்னி செய்முறை (pudina chutney in Tamil)

புதினாக் கீரையுடன், கையளவுக் கொத்துமல்லித்தழை, பூண்டு பல், பெருங்காயம், உப்பு, மிளகு, மிளகாய், புளி, வறுத்த உளுத்தம் பருப்பு சேர்த்து வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து அம்மியில் வைத்து அரைத்து தாளித்து சட்னியாக எடுத்துக் கொண்டு சுடு சோற்றில் கலந்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

நல்லெண்ணெய்க்கு பதில் நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் அகலும், வாயுத் தொல்லை போக்கும், சோகை, குடல்புண், வயிற்று எரிச்சல், வாயுப்பொறுமல் ஆகியவை அகன்று உடல் நலம் பெறும் புதினா மருத்துவ பயன்கள் pudina benefits in Tamil.

இருதய நோய், நுரையீரல் நோய்

புதினாக் கீரையைச் சுத்தமாகக் கழுவி உரலில் போட்டு நன்றாக இடித்து கால் லிட்டர் சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் கொஞ்சம் இஞ்சி, சுக்கு, பூண்டு, பெருங்காயம் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவேண்டும்.

நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொண்டு அதில் அரை அவுன்ஸ் எடுத்து தேவையான அளவு தேன் கலந்து தினசரி காலையில் சாப்பிட்டுவிட்டு உடன் சூடான பால் குடித்து வரவேண்டும். இதனால் இருதய நோய், நுரையீரல் நோய், சர்வாக வாதம், வயிற்றுக் கோளாறு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள்.

தொண்டை புண் குணமாக

புதினா மருத்துவ பயன்கள்: தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும். புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம்.

பெண்கள் மாதவிலக்கு

மேற்கண்ட முறையில் தயாரித்து மாதவிலக்கால் துன்பப்படும் பெண்கள் மாதவிலக்கு ஏற்பட்டுள்ள ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சூதகச் சிக்கல் தீர்ந்துவிடும்.

ஆண்மை அதிகரிக்க

அக்னிமாந்தம், வயிற்றுக் குமட்டல் போன்றவற்றிற்கு இந்தக் கீரையைச் சாப்பிடலாம். ஆண்மை அதிகரிக்க இதனை உணவில் அடிக்கடி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

இருதய நோய்

புதினா மருத்துவ பயன்கள்: புதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும். புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும்.

பல் ஈறு பிரச்சனை தீர்வு

இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

கஷ்டத்தைப் பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல் துலக்கி வந்தால், பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். பல் சம்பந்தமான எந்த வியாதியும் வராது.

இதைத் தயாரிப்பதும் சுலபம் தான. புதினாக்கீரையை எடுத்து சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும்.

புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்க வேண்டும். இந்த சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் இதனுடன் சேர்த்து இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும் புதினா மருத்துவ பயன்கள் pudina benefits in tamil.உடல் புத்துணர்வுக்கு புதினா நீர்

தினசரி காலையும் மாலையும் தேநீர் அல்லது காபி அருந்து வதற்குப் பதிலாக புதினா நீர் அருந்தினால் உடல் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்.

புதினாக் கீரையைக் காயவைத்து தூளாக்கி இரண்டு தேக்கரண்டி பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்துப் பால் சேர்த்து தேநீருக்குப் பதிலாக அருந்தி வந்தால் நோய்கள் இருப்பின் குணமாகும். அத்துடன் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

எல்லாவித நோய்களுக்கும் புதினா துவையல்

புதினா மருத்துவ பயன்கள்: புதினாக் கீரையைத் துவையலாக்கிச் சாப்பிட்டால் பலவித நோய்கள் குணமாகும்.

புதினாக் கீரை ஒரு சிறிய கட்டு. பிரண்டைத் துண்டு 50 கிராம், பழைய புளி 75 கிராம், இஞ்சி ஒரு துண்டு, மிளகு மற்றும் சீரகம் சிறிதளவு, பூண்டு இரண்டு பல், கறிவேப்பிலை, கொத்துமல்லி சிறிதளவு, அத்துடன் கையளவு உளுத்தம் பருப்பு இவைகளைத் சேர்த்து சிறிது எண்ணெய் விட்டுப் பொன் வறுவலாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

அதனை அம்மியில் வைத்து தேவையான உப்பு சேர்த்து மைபோல் அரைத்து எடுத்துத்துவையலாக்கிவைத்துக் கொள்ளவும்.

தினசரி எலுமிச்சம் பழம் அளவுக்கு எடுத்துச் சோற்றில் கலந்து அத்துடன் சிறிது நெய்விட்டுப் பிசைந்து மூன்று உருண்டைகள் சாப்பிட்டப் பின்னர் அன்றாட சமையலின்படி மற்ற காய்கறிகளைச் சேர்த்து உணவைச் சாப்பிடவும்.

இதுபோன்று 40 நாட்கள் சாப்பிட்டாலே உடலிலுள்ள எல்லா நோய்களும் அகன்று விடும். சரும நோய்கள் இருப்பின் நீங்கிவிடும்.

பல் ஈறுகளில் கோளாறு

பல் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாக இருந்தாலும் பதினாக் கீரையைப் பச்சையாக மென்று சாப்பிடவும். அல்லது பதினாக் கீரையை நன்கு உலர்த்தி தூளாக்கிக் கொண்டு இத்தூளினால் தினசரி பல் துலக்கி வரவும்.

இதுபோன்று செய்வதனால் பல் ஈறுகளில் உண்டாகும் கோணறு முதல் பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதுடன் மேற்கொண்டு பற்களில் உண்டாகும் நோய்கள் வராமல் தடுக்கிறது புதினா மருத்துவ பயன்கள் pudina benefits in Tamil.

குரல் வளத்திற்கு புதினா

பாடகர்கள் குரல் வளம் பெறவும், பேச்சாளர்கள் பிசிரின்றி உரத்துத் தெளிவாகப் பேசவும் புதினா மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

புதினாக்கீரையைச் சுத்தமாக்கி கஷாயமாக்கிக் கொண்டு, அதில் சிறிது உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும். இந்தக் கஷாயத்தினால் தினசரி வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் இனிமையான குரல் வளத்தைப் பெறலாம்.

குமட்டல் குணமாக

புதினா மருத்துவ பயன்கள்: சிலருக்குக் குமட்டல் வரும். ஆனால் வாந்தி வராது. அதனால் அதிக ஓசையுடன் குமட்டல் வந்து கொண்டே இருக்கும். இதனால் மிகவும் சிரமமாக இருக்கும். இதனை நிறுத்த சிறந்த வழி.

ஒரு கைப்பிடி புதினாக் கீரையுடன் ஒரு துண்டு இஞ்சி, 8 மிளகு எடுத்துத் தட்டி இவற்றையெல்லாம் ஒரு மட்பாண்டத்தில் போட்டு நான்கு டம்ளர் நீர்விட்டுக் காய்ச்சவும்.

அது இரண்டு டம்ளராகச் சுண்டியதும் வடிகட்டி எடுத்து அதில் 50 கிராம் பனைவெல்லம் சேர்த்து வைத்துக் கொள்ளவும். இதனை அரைமணிக்கு ஒரு முறை ஒரு வாய் வீதம் குடித்து வந்தால் தொடர்ந்து தொல்லைக் கொடுத்த குமட்டல் குணமாகிவிடும்.

சர்வ வாதத்திற்கு

புதினா மருத்துவ பயன்கள்: வாத சம்பந்தமாகக் கஷ்டப்படுகிறவர்கள், இருதய நோய், நுரையீரல் நிவாரணம் பெறலாம்.

நோய் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்க்காணும் முறையைக் கையாண்டு புதினாக் கீரையை ஆய்ந்து சுத்தமாகக் கழுவி நன்றாக நைந்து கால் லிட்டர் சாறு எடுத்துக் கொள்ளவும்.

அதில் இஞ்சி, சுக்கு, பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்ப சிறிதளவு சேர்த்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்சவும். காய்ச்சியதும் கீழே இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதில் அரை அவுன்ஸ் எடுத்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டுவிட்டு ஒரு கிளாஸ் பசும்பால் சூடாக சாப்பிடவும். இதுபோன்று தினசரி காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்வ வாதம், இருதயநோய், நுரையீரல் சம்பந்தபட்ட நோய்கள் குணமாகும்.

சூதக வலிக்கும், ஆண்மை பெருக்கத்திற்கும்

பெண்கள் மாத விலக்கினால் கஷ்டப்பட்டாலோ, இல்லற இன்பத்தில் சுகம் பெறவும் புதினாக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பெண் மாதவிலக்கானது முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சூதகச் சிக்கல்கள் நீங்கும் புதினா மருத்துவ பயன்கள் pudina benefits in Tamil.

தொடர் விக்கல் நிற்க புதினா சூரணம்

புதினா மருத்துவ பயன்கள்: விக்கல் வந்தால் சிறிது நேரத்தில் மறைந்து போவதும் உண்டு. ஒரு சிலருக்குத்தொடர்ந்து விக்கல் இருந்து கொண்டே கஷ்டத்தைக் கொடுக்கும்.

எந்த விக்கலாக இருந்தாலும் உடனே நிறுத்த புதினா சூரணம் நல்ல பலனைக் கொடுக்கும்.

புதினா கீரையை வேருடன் பிடுங்கி வந்து சுத்தமாகக் கழுவி நன்றக உலர்த்தி இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும்.

பின்னர் அதே அளவு அரிசித் திப்பிலியை உலர்த்தி இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும். அதன் பின்னர் இரண்டு தூளையும் சம அளவாக எடுத்து ஒன்று சேர்த்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

விக்கல் இருந்தாலோ, தொடர் விக்கல் இருந்தாலோ இந்தச் சூரணத்திலிருந்து கால் டீஸ்பூன் எடுத்து அசல் தேனில் குழைத்து சாப்பிடவும் உடனடியாக விக்கல் நின்றுவிடும் புதினா மருத்துவ பயன்கள் pudina benefits in Tamil.

கீரிப்பூச்சிகள்

கீரிப்பூச்சிகள் குடலில் சேர்ந்து தொந்தரவு கொடுத்தால் உடனடியாக புதினா இலையைக் கொண்டு வந்து கஷாயம் செய்து இரண்டு வேளைகள் வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும். குடலிலுள்ள கீரிப்பூச்சிகள் வெளியே வந்துவிடும்.

டி.பி. நோய்க்கு சிறந்தடானிக் புதினா

புதினா மருத்துவ பயன்கள் : மூச்சுவிட சிரமப்படும் ஆஸ்துமா டி.பி நோய்க்கு சிறந்த டானிக்காக இருக்கிறது புதினா.

ஒரு தேக்கரண்டி புதினாக் கீரையின் சாறில் ஒரு டம்ளர் காரட் சாறு சேர்த்து அத்துடன் ஒரு ஸ்பூன் வினிக்கர், இரண்டு ஸ்பூன் சுத்தமான தேன் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட நோயால் மூச்சுவிட சிரப்படுகிறவர்கள் தினசரி ஒரு வேளை மட்டும் அருந்தவும். இதுபோன்று தினசரி இதனை சாப்பிட்டு வந்தால் டானிக்காக இருந்து உடலைத் மாக்குகிறது.

தவிர கட்டியான சளி நீர்த்துப் போவதுடன் மேலும் நோய்க் கிருமிகள் சேருவதும் தடைப்பட்டு நோய் குணமாகிறது.

Leave a Comment