பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் 2024 | Essential Benefits Ponnanganni Keerai in Tamil


பொன்னாங்கண்ணி கீரை Benefits in Tamil: பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் இது நீர் நிலைகளை அடுத்து ஈரத்தாக்குள்ள இடத்தில் செழித்து வளரும் இது கொடி போல படர்ந்து, ஆனால், சிறு செடிப்போல கொத்துக் கொத்தாக முளைத்திருக்கும்.

இதன் இலை ஒரு அங்குல முதல் இரண்டங்குலம் வரை அகலமுள்ளதாகவும், பச்சை நிறமாகவும் இருக்கும். இதன் பூக்கள் கொத்துக் கொத்தாக இருக்கும். இந்த வகையில் மஞ்சள் பொன்னாங்கண்ணி என்று ஒரு வகை உண்டு. இது மஞ்சள் நிறமாக பூக்கள் பூக்கும். இலைகள் பெரியதாக சற்று மஞ்சள் கலந்து நிறத்துடன் இருக்கும். இரண்டிற்கும் குணம் ஒன்றுதான.

பொன்னாங்கண்ணி கீரை வகைகளில் பலவகைகள் மருத்துவத்திற்குப் பயனளிக்கிறது என்றாலும் பொன்னாங்கண்ணி தனித்தன்மை வாய்ந்ததாகும். இது ஒரு கொடி வகையாகும்.

பொன் + ஆம் + காண் + நீ = பொன் ஆம் காண் நீ- என்ற பெயரின் இயற்கைத் தன்மையாக சரீரத்தைப் பொன் மயமாக்குவதில் முதன்மையான இடத்தைப் பெறுகிறது இம்மூலிகை.

பொன்னாம்காணி கீரையை, கொடுப்பை, பொன்னி, கனகவல்லி, கபாலரட்சணி, நயனரோக நிவாரணி எனப் பல பெயர்களில் மருத்துவர்கள் கூறுவார்கள்.

பொன்னாங்காணிக் கீரை கண்களைப் பொன்போன்று காக்க வல்லது. இக்கீரையை அடிக்கடி உணவில் உபயோகித்து வந்தால் கண் எரிச்சல், கண் மங்கல், கண்ணில் நீர்வடிதல், கண்கட்டி, கண்களில் அதிக ஊளை கட்டுதல் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கக் கூடிய ஆற்றல் உள்ளது.

பொன்னாங்கண்ணி கீரையில் பல சிறப்புகள் அடங்கியிருப்பினும் குறிப்பாக கண்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

இதனைக் கண்கள் பொன் போல காக்கும் கீரை என்று சொன்னாலும் மிகை ஆகாது. பொன்னாங்கண்ணி கீரையை எப்படி சமையல் செய்து சாப்பிட்டாலும் மிகருசியாக இருக்கும்.

வைட்டமின் “A” சத்து மிகுதியாக உள்ளது. தவிர புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துகளும் அடங்கியுள்ளன.

பொன்னாங்கண்ணி கீரையைக் குழம்பு வைக்கலாம். கூட்டு, பெரியல், மசியல் செய்யலாம். பொன்னங்கண்ணி கீரையில் தங்கச் சத்து இருப்பதால், அது உடலை பொன்னிறமாக்கும்.

பொன்னாங்கண்ணி கீரையைத் தினசரி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தைத் தணித்துச் சமநிலையில் சம்பந்தமான கோளாறினால் வைக்கும். பாதிக்கப்படுகிறவர்கள், பொன்னாங்கண்ணி கீரையைச் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பூரண கூட கண குணமடையலாம்.

பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் (ponnanganni keerai benefits in Tamil)

தாது புஷ்டி உண்டாக

பொன்னாங்கண்ணி கீரையை தேங்காய் சேர்த்து. நெய்யில் பொரியல் செய்துத் தினசரி தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது புஷ்டி உண்டாகும்.

பொன்னாங்கண்ணி தைலம் தயார் செய்து சனி, புதன் கிழமைகளில் ஸ்நானம் செய்து வந்தால் கண் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும். உடல் உஷ்ணத்தைத் தணித்துச் சமநிலையில் வைக்கும். கண்களில் நீர்வடிதல், எரித்தல், பார்வை மங்கல் நிவர்த்தியாகும்.

இரத்த ஓட்டம் பெருகும்

பொன்னாங்கண்ணி கீரையில் அதிக அளவு இரும்புச் சத்து அடங்கிக்கிடக்கிறது. இக்கீரையைத் தொடர்ச்சியாக சாப்பிட்டுவரின் உடலில் வலிவு கூடும். இரத்த ஓட்டம் பெருகும்.

இரும்புச் சத்துடன், புரோட்டின் சத்தும் இக்கீரையில் பெருமளவு அடங்கியுள்ளது. எனவே இரத்தம் சுத்தமடையும். இருதயம் வலுப்படும். மேலும், தேகம் ஆரோக்கியமாக விளங்குவதோடு, மேனி பளபளப்புடன் ஒளி பெற்றுத் திகழும்.

இக்கீரையை உணவுடன் சேர்த்தோ, தனியாக பக்குவம் செய்தோ உண்டு வரலாம். குல்கந்தாக தயாரித்தும் உபயோகிக்கலாம். தைலமாக காய்ச்சி பயன்படுத்தவும் செய்யலாம்.

பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கச் சுலபமான இரண்டு முறைகளைக் கீழே தருகிறேன். ஏதாவது ஒரு வகையில் தைலம் தயார் செய்து உபயோகித்துப் பயன் அடையலாம்.

பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் செடியை வேருடன் தேவையான அளவு கொண்டு வந்து நன்றாக கழுவி விட்டு, சுத்தமான உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும்.

இலையும், நரம்பும் நைந்தபின் அதை எடுத்துக் கையில் வைத்துக் கெட்டியாகப் பிடித்துப் பிழிந்தால் சாறு வரும். இந்தச் சாற்றைக் களிம்பு ஏறாத ஒரு பாத்திரத்தில் பிடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு துணியில் வடிகட்டி ஆழாக்களவு சாற்றை ஒரு கலாய் பூசிய பெரிய பாத்திரத்தில் விட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு, ஆழாக்களவு பசும்பாலையும், அதே அளவு நல்லெண்ணெயையும் அதில் சேர்த்துக் கலக்கி சுமார் இரண்டு மணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும்.

வெள்ளை மிளகு, சடாமஞ்சி, வெட்டிவேர், பூலாங் கிழங்கு, பாசிப்பயிறு என்னும் பச்சைப் பயிறு இவைகளை வகைக்கு 24 கிராம் எடை எடுத்து, அம்மியில் வைத்து தண்ணீர் விட்டு மைபோல் அரைத்து இதையும் பொன்னாங்கண்ணி சாற்றில் போட்டு நன்றாகக் கலந்து வைத்துவிட வேண்டும்.

பிறகு, பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாகத் தீ எரிய விட வேண்டும். சூடேறியபின் முதலில் மருந்துக் கலவைக் கொதிக்க ஆரம்பிக்கும்.

வரவர நீர் சுண்டியபின் மருந்திலுள்ள திப்பி , எண்ணெயில் வேரும், மருந்தும் வெந்து சிவந்து வரும் சமயம் ஒரு விதமான நல்ல வாசனை வரும்.

இந்த சமயம் பாத்திரத்தை இறக்கி வைத்து, ஆறிய பின் திப்பியைப் பிழிந்து எடுத்துவிட்டு, எண்ணெயை ஒரு சீசாவில் வைத்துக் கொண்டு உபயோகிக்க வேண்டும் பொன்னாங்கண்ணி கீரை பயன்கள்.

பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் 2024
பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் 2024 | Benefits in Tamil

கண்களில் உண்டாகும் நோய்களுக்கு

இக்கீரையை உப்பில்லாமல் வேகவைத்து வெண்ணையுடன் கலந்து சாப்பிட்டுவரின் கண் ரோகங்கள் குணமாகும். வெண்ணெயில் வதக்கி கண்களில் வைத்துக் கட்டவும் செய்யலாம். கண்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்து பொன்னாங்கண்ணி கீரை எனலாம்.

கண்களில் உண்டாகும் நோய்களுக்கு இதனை பசுவெண்ணையில் வதக்கி கண்களில் வைத்துக் கட்டினால் கண் நோய்கள் காணாமல் போகும். கண்ணில் மறைப்பு விழுதலை கண் காசம் என்று கூறுவார்கள்.

இதனைப் போக்க கீரையில் உப்பு சேர்க்காமல் வேகவைத்து பசு வெண்ணையுடன் தினசரி சாப்பிட்டு வந்தால் இது அகன்றுவிடும்.

தொண்டைப்புண், மார்பு வலிக்குத் துவையல்

பொன்னாங்காணி கீரையில் தேங்காய், பருப்பு, இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்துத் துவையலாக உணவில் சேர்த்து உண்டால் மேலே கண்ட வியாதிகள் நிவர்த்தியாகி உடல் சுறுசுறுப்பு அடையும்.

இதனைப் பொரியல், கடையல் செய்தும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் மேனி அழகு பெறும்.

கண்கள் குளிர்ச்சியடையவும், உடல் சுகம் பெறவும்

பொன்னாங்காணி கீரையை தைலமாகச் செய்து தலைக்குச் தேய்த்துத் தலை முழுகி வந்தால் மேற்கண்ட கோளாறுகள் குணமாகும் பொன்னாங்கண்ணி கீரை பயன்கள்.

ஆனால் இதனையே கீழ்க்காணும் முறையில் பயன்படுத்தினால் நல்ல பயனைப் பெறலாம்.

இக்கீரையைச் சுத்தமாகப் பார்த்து ஒரு 100 கிராம் எடுத்துக் கொள்ளவும். அதனை அம்மியில் வைத்து மெழுகு போல அரைக்கவும், விழுது பதத்திற்கு வந்ததும் மிளகு 25 கிராம், சீரகம் 25 கிராம் இரண்டையும் விழுதில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதில் வெந்நீர் விட்டுக் குழம்பாகக் கலக்கி தலை முதல் கால் வரை உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் கழிந்ததும் குளிர்ந்த நீர் கலக்காத வெந்நீரில் தலை முழுகவும். இது போன்று தொடர்ந்து தலை முழுகி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

அஜீரணக் கோளாறு, வாயு – பித்த தொல்லைகளுக்கு

பொன்னாங்காணி கீரையைக் கொண்டு வந்து நிழலில் நன்றாக உலர்த்திச் சன்னமாக பொடி செய்து கொள்ளவும்.

துவரம் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறி வேப்பிலை ஆகியவற்றைச் சமமாக எடுத்து வறுப்பதை வறுத்து எல்லா வற்றையும் சேர்த்துத் தேவையான உப்பு சேர்த்து இடித்து, முன்னரே இடித்து வைத்துள்ள பொன்னாங்காணி பொடியுடன் கலந்து பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

இதனைச் சுடு சோறில் நெய்விட்டுப் பிசைந்து சாப்பிடவும். இதனால் மேலே கண்ட பிணிகள் குணமாகும்.

குடல்புண்- பித்தம் – அரோசிகம் நோய்கள் அகல

பொன்னாங்காணி கீரையைக் கொடியுடன் கொண்டுவந்து கீரையைத் தனியாக எடுத்துவிட்டு அக்கொடியை துண்டாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து அந்நீரை வடித்துக்கொள்ளவும்.

வடித்த நீரில் ரசத்துக்குரிய பொருட்களான உப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பகலில் மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

இதுபோன்று பகலில் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் மேலே கண்ட நோய்கள் குணமாகும் .

பொன்னாங்கண்ணி தைலம் (வேறுமுறை )

முன் சொன்னது போல பொன்னாங்கண்ணி சாறு ஆழாக்களவு எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு அத்துடன் 2 ஆழாக்களவு நல்லெண்ணெய் கூட்டி வைத்து விட வேண்டும்.

  • பூலாங்கிழங்கு 16 கிராம்
  • வெட்டி வேர் 16 கிராம்
  • கோஷ்டம் 16 கிராம்
  • அதிமதுரம் 16 கிராம்
  • கருஞ்சீரகம் 16 கிராம்
  • செங்கழுநீர்க் கிழங்கு 16 கிராம்

இவைகளைப் சுவின் பால் விட்டு மை போல அரைத்து எடுத்து, பொன்னாங்கண்ணி சாற்றுடன் கலந்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நன்றாகத் தீயெரித்துக் காய்ச்ச வேண்டும்.

மருந்து வெந்து சிவந்து வரும் சமயம் நல்ல வாசனை வீசும். அந்த சமயம் பாத்திரத்தை இறக்கி எண்ணெய் ஆறியபின் திப்பியைக் கையிலெடுத்து நன்றாகப் பிழிந்து எண்ணெய் மட்டும் எடுத்து, வடிகட்டிச் சீசாவில் வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும்.

Suggested Post: மிளகு மருத்துவ பயன்கள் | Milagu Benefits In Tamil

பொன்னாங்கண்ணி தைலம்

கீரையில் தைலம் தயாரிப்பார்கள். அந்தத் தைலத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் உடல் சூட்டைத் தணிக்கும். உடல் மினுமினுப்புடன் இருக்கும்.

பொன்னாங்கண்ணி தைலத்தை வாரம் இருமுறை உடலில் தேய்த்துக் குளிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என்பதினால் கீழ்க் காணும் முறையில் தைலம் தயாரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நல்ல பசுமையான பொன்னாங்கண்ணி கீரையை வாங்கி வந்து நன்கு சுத்தம் செய்து இடித்து அரைக்கிலோ சாறு எடுத்துக் கொண்டு சுத்தமான முக்கால் கிலோ தேங்காய் எண்ணெயையும் இதில் சேர்த்து களிம்பு ஏறாத ஒரு பாத்திரத்தில் ஊற்றித்தனியாக எடுத்து வைக்கவும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அமுக்கனாங் கிழங்கு, குறுந்தொட்டி, கொம்பு அரக்கு, செம்பருத்திப் பூ இவைகளை வகைக்கு 50 கிராம் வீதம் சேகரித்து அம்மியில் வைத்து மெழுகாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை கலந்து வைத்துள்ள பொன்னாங்கண்ணி, எண்ணெய் கலவையில் போட்டு நன்கு கலக்கி அடுப்பில் ஏற்றி சிறு தீயில் வைத்துக் காய்ச்ச வேண்டும்.

சரக்குகள் எண்ணெயில் வெந்து நன்கு சிவந்து வந்ததும் கீழே இறக்கிவிடவும். சூடு ஆறிய பிறகு வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொன்னாங்கண்ணி கீரை தைலத்தில் சிறிது எடுத்து தலையில் தேய்த்து வாரம் இருமுறை குளித்து வந்தால் உடல் நலமாக இருக்கும்.

இக்கீரையின் இயல்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து (Calcium), இரும்புச் சத்து (Iron), புரதத் சத்து (Protein) பொருள்கள் மிகுதியாக அடங்கியுளள்ன.

இந்தக் கீரையைத் தொடர்ந்து உட்கொண்டு வர நாளடைவில் தேகமானது பொன்னிறம் பெற்றதாக மாறும் என்பார்கள் சித்த மருத்துவர்கள். எனவேதான் இது ‘பொன்னாங்காண் நீ கீரை’ என காரணப் பெயர் பெற்று அழைக்கப்படுகிறது ponnanganni keerai benefits in tamil பொன்னாங்கண்ணி கீரை பயன்கள்

Leave a Comment