milagu benefits in tamil மிளகு மருத்துவ பயன்கள் மிளகு கொடி வகையைச் சேர்ந்தது. இதனுடைய இலைகள் வெற்றிலையைப் போன்று பெரியதாக இருக்கும். இது மரத்தில் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும்.
இதன் பழம்தான் மிளகு எனப்படும். பழத்தை எடுத்து உலர்த்தி பக்குவப்படுத்தி எடுப்பதுதான் மிளகு எனப்படுகிறது.
இல்லங்களில் சமையலில் மிளகு இன்றியமையாத முக்கியப் பொருளாக விளங்குகிறது. தவிர மருத்துவத்திலும் முக்கிய பங்கை வகிக்கின்றது.
சித்த மருத்துவத்தில் மிளகை முதலாகக் கொண்டு மிளகுத் தைலம், மிளகு லேகியம், பற்பொடி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் மிளகு வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது.
மிளகு சமையல் வகையில் சிலவற்றில் மிளகு சேர்ப்பது வழக்கம். மிளகு காரத்திற்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படுகிறது. மிளகில் ஒருவிதமான காரமும், விறுவிறுப்பும் உண்டு. மிளகில் பலவகை உண்டு.
இவற்றில் கெட்டி மிளகு என்ற கறுப்பு நிறமுள்ள உருண்டை மிளகும், வால் மிளகு என்ற வாலுடைய மிளகும் தான் அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. வெள்ளை மிளகு என்ற ஒருவகையும் உண்டு. இது மருந்து வகையில் சேர்க்கப்படுகிறது. வாசனைப் பாக்கு இவைகளுடன் விறுவிறுப்பாகவும் வாசனைக்காகவும் சேர்க்கப்படுகிறது.
மிளகு பல வியாதிகளைக் குணப்படுத்தும் அரிய சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இது வைத்திய முறையில் ஒரு ஒளஷதப் பொருளாகவே பயன்பட்டு வருகிறது. மிளகு பல வியாதிகளைக் குணப்படுத்தும் என்பது பலருக்குத் தெரியாது.
பல வியாதிகளைக் குணப்படுத்தும் மிளகை வீட்டில் வைத்துக் கொண்டே மருந்துக்காகப் பலயிடம் அலைவது நமது மக்களிடையேயுள்ள ஒரு பெரிய குறைபாடு என்று தான் கூறவேண்டும்.
மிளகைப் பற்றிய விபரம் தெரியாததே இதற்குக் காரணமாகும். எனவே மிளகு எந்தவிதமாக நமக்குப் பயன்பட்டு வியாதிகளைக் குணப்படுத்துகிறது என்பதை விளக்குவோம்.
மிளகு மருத்துவ பயன்கள் – Milagu benefits in tamil
ஜலதோஷத்தினாலும், உஷணம் காரணமாகவும் இருமல் ஏற்படும். ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டால் இருமும் பொழுது சளி வெளியே வரும். உஷ்ணம் காரணமாக இருமல் ஏற்பட்டால் சளி வராது. வறட்டு இருமலாக இருக்கும்.
இருமல் ஏற்பட்டிருந்தாலும், ஜலதோஷம் ஏற்பட்டிருந்தாலும் மிளகு குணப்படுத்திவிடும்.
வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதிவரும்வரைக் கொதிக்க வைத்து. இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இதேபோல மூன்று நாள் சாப்பிட்டால் போதும். வறட்டு இருமல் குணமாகும்.
ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால், ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
மிளகு வறுபட்டு சிவந்து கருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.
கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக் கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும்.
மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்து விடவேண்டும். இதனால் இருமல் குணமாகும் milagu benefits in tamil மிளகு மருத்துவ பயன்கள்.
பாரிச வாயுவினால் ஏற்படும் வலி குணமாக
பாரிச வாயு காரணமாக உடலில் ஒரு பகுதியில் வலி ஏற்படுவதுண்டு அப்படி வலி ஏற்பட்டால், ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து ஆழாக்கு மிளகை அதில் போட்டு தீப்பறக்க வறுக்க வேண்டும்.
தீப்பொறி பறக்கும் சமயம் அதை ஒரு அகலமான தட்டில் கொட்டிப் பாப்பி அதன்மேல் முறத்தை வைத்து மூடி, வலியுள்ளயிட த்தை முறத்தின்மேல் வைத்து சூடு ஏற்றி அந்த குடு வலியுள்ள இடத்தைத் தாக்கும்படிச் செய்ய வேண்டும்.
இந்த விதமாக வாய்வு கலையும் வரை செய்ய வேண்டும். பிறகு, மிளகு வறுத்துக் கஷாயமிட்டுக் கொடுக்க வேண்டும். இந்த விதமாகச் செய்தால் பாரிச வாயு குணமாகும் milagu benefits in tamil மிளகு மருத்துவ பயன்கள்.
காய்ச்சல் குணமாக
பலவகையான காய்ச்சல் உண்டு. ஆரம்பத்தில் அது எந்த வகையான காய்ச்சல் என்பதை எந்த வைத்திய நிபுணரும் நிர்ணயிக்க முடியாது. ஒரு சில நாட்களுக்குப் பின்னரே காய்ச்சலின் நிலையையும், போக்கையும் கவனித்து அதன் பிறகே அது தின்ன காய்ச்சல் என நிர்ணயிப்பார்கள்.
ஆகையால், காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும்.
சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும்.
மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி, அதில் தீப்பொறி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரைவிட்டு, நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.
கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும்.
இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக் கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.
முறை காய்ச்சலுக்கு
ஒருநாள் இரண்டு நாள் காய்ச்சல் அடித்து பிறகு விட்டு, மறுபடியும் அதேபோல் காய்ச்சல் வருமானால் இதை முறைக் காய்ச்சல் என்று சொல்லலாம்.
இதற்கு தேக்கரண்டியளவு மிளகு, ஒரு பெரிய வெள்ளைப் பூண்டை உடைத்து அதன் சரிபாதி பற்களை எடுத்துத் தோலை உரித்துவிட்டு, அதையும் அம்மியில் இலந்தையிலையைக் கொண்டுவந்து கைப்பிடியளவு எடுத்து அதையும் சேர்த்து மைபோல அரைக்க வேண்டும்.
அரைத்த மருந்தை சரிசமமாக இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியைக் காலை, வேளையில் வாயில் போட்டு, கொஞ்சம் வெந்நீர் குடித்துவிட வேண்டும்.இந்த விதமாக காய்ச்சல் குணமாகும் வரை சாப்பிட வேண்டும்,
இந்த மருந்தைச் சாப்பிடும்பொழுது ரொட்டி, பால், காபி சாப்பிடலாம். சாப்பாடு தேவைப்பட்டால் வெறும் சாதம் பால்விட்டுச் சாப்பிடலாம். புளி மற்ற பதார்த்தம் கூடாது.
குளிர் காய்ச்சல் குணமாக
சாதாரண காய்ச்சலாக ஆரம்பித்து, வரவர குளிர் அதிகமாகி உடல் முழுவதும் நடுங்கும், காய்ச்சலுமிருக்கும்.
இதற்கு 20 கிராம் கழற்சிப் பருப்பு, 10 கிராம் மிளகு, 10 கிராம் பெருங்காயம் இவைகளை அம்மியில் வைத்துத் தேன் விட்டு மைபோல, ஆனால் மெழுகு பதமாகக் கெட்டியாக வரும்படி அரைத்து அதைக் கழற்சிக்காயளவு (5 கிராம்) உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, காலையில் ஒரு உருண்டையும், மாலையில் ஒரு உருண்டையுமாகக் காய்ச்சல் குணமாகும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
இந்த சமயம் ரொட்டி, காபி தவிர வேறு ஆகாரம் சாப்பிடக்கூடாது. காய்ச்சல் விட்ட மூன்று நாள் வரை புளி இலலாத பத்தியம் இருக்க வேண்டும் milagu benefits in tamil மிளகு மருத்துவ பயன்கள்.
அஜீரணபேதி, உஷ்ணபேதி குணமாக
அஜீரணம் காரணமாகவும், உஷ்ணம் காரணமாகவும் வயிற்றுப் போக்கு ஏற்படுவதுண்டு.
தேக்கரண்டியளவு மிளகை அம்மியில் வைத்து, அரைத் தேக்கரண்டியளவு சீரகத்தையும், மூன்று வெள்ளைப் பூண்டுப் பற்களையும் சேர்த்து சிறிதளவு உப்புச் சேர்த்து மைபோல அரைத்து அதை இரண்டு பாகங்களாகச் செய்து. காலையில் பகுதியையும், மாலையில் ஒரு பகுதியையும் வாயில் போட்டு விழுங்கிவிட வேண்டும்.
இந்த விதமாக வயிற்றுப் போக்கு நிற்கும் வரைச் சாப்பிட வேண்டும். இருமலுக்குக் கஷாயம் போடுவது போல கஷாயம் போட்டுக் கொடுத்தாலும் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
பல்வலி குணமாக
கொஞ்சம் மிளகை எடுத்து அதே அளவுச் சர்க்கரை சேர்த்து அரைத்து, பல்வலி ஏற்பட்டுள்ள இடத்தில் சிறிதளவு வைத்து வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்.
சேரும் உமிழ்நீரை மட்டும் துப்பிவிட வேண்டும். பிறகு வெந்நீரைக் கொண்டு வாய்க் கொப்புளிக்க வேண்டும்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இவ்விதம் செய்தால் எந்த வகையான பல்வலியும் குணமாகும்.
காசநோய் குணமாக
காசநோய் ஆரம்பமாகி பல மாதங்கள் சென்று பின்னர் தான் அதைக் காசநோய் என்று அறியமுடியும். மிளகு காசநோயைப் பூரணமாகக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
மிளகைக் கொண்டு காசநோயைக் குணப்படுத்த வேண்டுமானால், மருந்து சாப்பிடுவதற்கு முதல்நாள் மட்டும் ஒரு மருந்தைச் சாப்பிட வேண்டும்.
நிலவாகை மரத்தின் அடிப்பாகத்தைத் தோண்டி அந்த இடத்தில் கனமாகப் பதிந்துள்ள வேரின் மேல் பட்டையைச் சீவி சாடுத்து வந்து அதை மைபோல் அரைத்து அரை ஆழாக்களவு வெந்நீரில் கலந்து காலையில் மட்டும் கொடுத்து விடவேண்டும்.
100 கிராம் மிளகை உரலில் போட்டு இடித்து சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
காலை, மாலை இரண்டு தேக்கரண்டியளவு பசு நெய்யில் அரைத் தேக்கரண்டியளவு மிளகுத் தூளைச் சேர்த்துக் குழப்பிச் சாப்பிட்டு விடவேண்டும்.
இப்படி ஐந்து நாள் தொடர்ந்து சாப்பிட்டு, ஐந்து நாள் மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விட்டு மறுபடி புதியதாக மருந்து சாப்பிட ஆரம்பித்தது போல ஐந்துநாள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
இந்த வகையில் ஒரு படியளவு பசுவின் நெய் உடலுக்குள் செல்லும்படி செய்துவிட்டால் காசநோய் குணமாகிவிடும்.
நரம்பு சிலந்தி குணமாக
நரம்புச் சிலந்தி என்பது சதையிலும் நரம்பு போன்ற பலத்துடன் மெல்லிய நூல் போல நீண்ட வளர்ந்து வரும் ஒருவகைப் பூச்சியாகும்.
இது வளர்ந்தபின் சதையை விட்டு வெளியேற வழிதேடும் அந்த சமயம் காலில் ஒரு சிறு கட்டிப் போல ஆரம்பித்து புண்ணாகி அதன் வழியே வெளியேறும்.
அசுத்தமான நீரில் குளிப்பதினாலும், அசுத்த நீரைப் பருகுவதனாலும் தான் நரம்புச் சிலந்தி உண்டாகிறது. இது கிராமப் பகுதியிலுள்ள மக்களிடம் தான் காணமுடியும்.
நரம்புச் சிலந்தி வெளியேறுமிடத்தில் மிளகு, அவுரி வேர் இவைகளில் வகைக்கு 10 கிராமும், 2.50 கிராம் பெருங்காயத்தையும் ஒன்றாகச் சேர்த்து மைபோல அரைத்து, புண் ஏற்படும் இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் நரம்புச் சிலந்தி மெதுமெதுவாக வெளியேறும்.
அந்த சமயம் ஒரு நெருப்புக் குச்சியை எடுத்து அதன் தலைபாகத்திலுள்ள மருந்தை மட்டும் உடைத்து எடுத்துவிட்டு அந்த குல்சியின் நடுபாகத்தில் பூச்சியின் தலையாகத்தை வைத்து மெதுவாக சுருட்டி மருந்தை வைத்துக் கட்டிவிட வேண்டும் மறுநாள் அவிழ்த்துப் பார்த்தால் பூச்சி மேலும் கொஞ்சம் வெளியேறியிருக்கும்.
பிறகு அந்தப் வைத்துக் கட்டிவிட வேண்டும். இந்த விதமாகத் தினசரி கொஞ்சம் பருலியையும் மெதுவாகக் குச்சியில் சுருட்டி புதிய மருந்து கொஞ்சமாகப் பூச்சியை சுருட்டி எடுக்க வேண்டும்.
அவசரப்பட்டு வேகமாக அல்லது பலமாக அதை வெளியே இழுக்கக்கூடாது. அப்படிச் செய்து பூச்சி அறுந்து விடுமானால், காலில் வீக்கம் ஏற்பட்டு பெரிய புண்ணாகி கஷ்டத்தைக் கொடுக்கும்.
எனவே எச்சரிக்கையாக கருட்டி எடுக்க வேண்டும். பூச்சி முழுவதும் வரும்வரைத் தினசரி மருந்து வைத்துக் கட்ட வேண்டும். பூச்சி முழுவதும் வெளியேறின பிறகு அந்தப் புண்ணை கருப்பு பிளாஸ்திரி போட்டு ஆற்றிவிட வேண்டும்.
தலைவலி குணமாக
தலைவலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. எந்தக் காரணத்தினால் தலைவலி ஏற்பட்டாலும் அதை மிளகைக் கொண்டு குணப்படுத்திவிடலாம்.
20 மிளகு, அதே அளவு செம்மண், அரையங்குல நீளமுள்ள காய்ந்த மிளகாய் இவைகளை அம்மியில் வைத்து, தண்ணீர் விட்டு மைபோல அரைத்து ஒரு கரண்டியில் போட்டு மேலும் தண்ணீர் விட்டு சந்தனம் போலக் கரைத்து நெருப்பின் மேல் வைத்துக் கொதிக்க வைத்து. தாங்கக்கூடிய அளவு சூட்டுடன் பொரியில் கனமாகப் பற்றுபோட்டு விட்டால் தலைவலி குணமாகும்.
முகப்பரு குணமாக
ஒரு சுத்தமான இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து அதில் ஆழாக்களவு சுத்தமான ஆமணக்கெண்ணெயை விட்டு மிளகு, பூண்டு இவைகளில் வகைக்கு 10 கிராம் எடை எடுத்து அம்மியில் வைத்து, ஒரு கைப்பிடியளவு துத்தியிலையையும் வைத்து மைபோல அரைத்து அதில் போட்டுக் கலக்கி நன்றாகக காய்ச்ச வேண்டும்.
எண்ணெயிலுள்ள மருந்துகள் வெந்து சிவந்து வந்தபின் சட்டியை இறக்கி வைத்துவிட்டு எண்ணெய் ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் வைத்துக் கொண்டு பருவின் மேல் அடிக்கடித் தடவி வந்தால் பரு பழுத்து உடையும் அல்லது வாயில்லாமல் அமுங்கிவிடும்.
சூதக வயிற்று வலி குணமாக
இருபது மிளகு. ஒரு வெள்ளைப் பூண்டை உடைத்து அதன் பற்களில் பாதியை எடுத்து தோலை உரித்துவிட்டு அம்மியில் வைத்து மாவிலங்கப்பட்டையில் கொட்டைப் பாக்களவு சேர்த்து மைபோல அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து கொஞ்சம் வெந்நீர் கொடுக்க வேண்டும்.
இந்த விதமாக தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சூதக வயிற்றுவலி குணமாகும்.
மேலே கூறியபடி மாவிலங்கப்பட்டைக்குப் பதிலாக வேலிப்பருத்தி என்னும் உத்தாமணிச் செடியின் கொழுந்து இலையில் ஐந்து இலையைச் சேர்த்து அரைத்துக் கொடுத்தாலும் சூதக வயிற்றுவலி குணமாகும்.
தேள் விஷம் இறங்க
தேள் கொட்டியதாகத் தெரிந்தவுடன் கொட்டின இடத்திற்கு மேலாக ஒரு நூல் கயிற்றைக் கொண்டு ஒரு கட்டு போட்டுவிட வேண்டும்.
உடனே ஒன்பது மிளகை எடுத்து ஒரு வெற்றிலை வைத்து நன்றாக மென்று விழுங்கச் சென்று உடனே முற்றின தேங்காய் முடியை உடைத்து, அதிலுள்ள தேங்காயைத் திருகிச் சிறுக சிறுக வாய் நிறையப் போட்டு நன்றாக மென்று பாலை மட்டும் விழுங்கிவிட்டு சக்கையைத் துப்பிவிடச் செய்ய வேண்டும்.
அரை மூடித் தேங்காயைத் தின்று முடித்தவுடன் தேள் விஷம் இறங்கிவிடும்.
கர்ப்ப ஸ்திரீகளின் வயிற்றுவலி குணமாக
வயிற்றில் குழந்தையுடனிருக்கும் கர்ப்ப ஸ்திரிகளுக்கு சிலசமயம் வயிற்றுவலி ஏற்படுவதுண்டு.
இதை நிறுத்த ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அரை ஆழாக்களவு தண்ணீரை விட்டு தேக்கரண்டியளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து போட்டு நன்றாகக் கொதித்தவுடன் இறக்கி கஷாயத்தை வடிகட்டி தேக்கரண்டியளவு கற்கண்டுத் தூளைப் போட்டுக் கலக்கிக் கொடுத்தால் வயிற்றுவலி குணமாகும். எந்த நேரத்திலும் தயார் செய்துக் கொடுக்கலாம்.
பாரிச வாயு குணமாக
பாரிச வாயுவினால் கஷ்டப்படுகிறவர்களுக்குப் பொடுதலையிலையைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து அதில் 5 கிராம் எடையும், மிளகு, பனைவெல்லம் வகைக்கு 5 கிராம் எடையும் எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, காலையில் மட்டும் உள்ளுக்குக் கொடுத்து விடவேண்டும்.
இந்த முறையில் மூன்றுநாள், ஏழுநாள், பதினோறு நாள் வரை நோய்க்கு ஏற்றபடி தொடர்ந்து கொடுத்து வந்தால் பாரிச வாயு குணமாகும்.
பித்தப்பாண்டு
கரிசலாங் கண்ணியிலையைக் கொண்டுவந்து அதைச் சுத்தம் பார்த்து உரலில் போட்டு இடித்துச் சாறு எடுத்து, அதில் அரை ஆழாக்களவு வடிகட்டி, 5 கிராம் வெள்ளைப் பூண்டை உரித்து, தோல் நீக்கி அம்மியில் வைத்து அதே அளவு மிளகையும் சேர்த்து மைபோல அரைத்து இதைக் கரிசலாங்கண்ணிச் சாற்றில் போட்டுக் கலக்கி, காலையில் மட்டும் வெறும் வயிற்றில் கொடுத்து விடவேண்டும். இந்த விதமாக மூன்று நாள் முதல் எழு நாட்கள் வரை தொடர்ந்து கொடுத்து வந்தால் முதல் பூரணமாக குணமடையும்.
மருந்து சாப்பிடும் பொழுது புளி நீக்கி பத்தியப் பித்தப்பாண்டு ரோக பதார்த்தமாகச் சாப்பிட்டு வரவேண்டும்.
பித்த எரிச்சல் குணமாக
மிளகு, சுத்தமாக ஆய்ந்து எடுக்கப்பட்ட வேப்பம்பூ, சுக்கு, தோல் உரித்த வெள்ளைப் பூண்டு பற்கள் வகைக்கு 10 கிராம் எடை வீதம் எடுத்து அம்மியில் வைத்து தேன்விட்டு மைபோல அரைத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
தினசரி காலை, மாலை கழற்சிக்காயளவு மருந்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்த எரிச்சல் குணமாகும்.
வைசூரி என்னும் அம்மை நோய் வராது தடுத்துக் கொள்ள
வைசூரி என்னும் அம்மை நோய் கொடுமையான நோய் என்பது எல்லோருக்கும் தெரியும். அது வருமுன் அதைத் தடுத்துவிடுவது நல்லதல்லவா?
வைசூரி வருமுன் சில அறிகுறிகள் தோன்றும். தலை கனமாக இருப்பதுபோல் தோன்றும். தலைவலி உண்டாகும். அடிக்கடி தும்மல் வரும்.
உடல் கதகதப்பாக இருந்து காய்ச்சலாக மாறும், மூன்றாம் நாள் வைசூரி கொப்புளம் தோன்றும்.
கொப்புளம் போடுவதற்கு முன் தோன்றும் அறிகுறிகளைக் கொண்டு வைசூரி வரப்போகிறது என்பதை அறிந்து தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
10 கிராம் மிளகையும் அதே அளவு வெந்தயத்தையும் அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக உடைத்து ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து லேசாக வறுத்துவிட்டு இரண்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி இறக்கி ஆறியவுடன் வடிகட்டி மூன்றில் ஒரு பங்கை காலையிலும், ஒரு பங்கைப் பால் 1 மணிக்கும், கடைசிப் பங்கை மாலையிலும் சாப்பிட்டு விடவேண்டும். இந்தவிதமாக மூன்று வேளை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. வெகு நோய் வராது தடுத்து விடலாம்.
வளரும் குழந்தைகள் பலம் பெற
சில குழந்தைகள் எவ்வளவு நல்ல ஆகாரத்தைச் சாப்பிட்டு வந்தாலும் உடல் பலம் பெறாமல் மெலிந்து காணப்படுவார்கள், இவர்கள் உடலைப் பலம் பெறச் செய்ய வேண்டுமானால் கீழ்க்கண்ட மருந்தைத் தயார் செய்துக் கொடுக்க வேண்டும்.
மிளகு, சீரகம், ஆலம் விழுது, தென்னம் பூ, அதிமதுரம் வகைக்கு 10 கிராம் எடை வீதம் எடுத்து அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு மைபோல அரைத்து ஒரு லிட்டர் பசுவின் நெய்யில் கலக்கி ஒரு சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இதைக்கொட்டி நன்றாகக் காய்ச்சி மருந்து வகை சிவந்து வந்தவுடன் இறக்கி வைத்து வடிகட்டி, சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை அரைத் தேக்கரண்டி நெய்யை உள்ளுக்குக் கொடுத்து வந்தால் உடல் பலம் பெறும்.
வாய்வு குணமாக
வாய்வு சம்பந்தமாக பல தொந்தரவுகள் உண்டாகும். உடலில் உள்ள வாயுவை அடியோடு நீக்கிவிட்டால் எந்த வகையான கோளாறுகளும் ஏற்படாது. இதற்கு மிளகு நன்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது.
மிளகு, சுக்கு, பெருங்காயம், திப்பிலி, கழற்சிக்காய்ப் பருப்பு இவைகளை வகைக்கு 20 கிராம் எடை வீதம் எடுத்து உரலில் போட்டு இடித்துச் சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
தினசரி காலை, மாலையில் அரைத்தேக்கரண்டி அளவு தூளை எடுத்து வாயில் போட்டு, கொஞ்சம் வெந்நீர் குடிக்க வேண்டும், இந்த விதமாகத் தொடர்ந்து 21 நாள் சாப்பிட்டு வந்தால் வாய்வு தொந்தரவு அறவே விலகும்.
இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது கீழ்க்கண்ட பொருளைச் சாப்பிடக்கூடாது.
அகத்திக்கீரை, இறால், உளுத்தம் பருப்பு, எருமைப்பால், பச்சைப் பருப்பு, பலாக்கொட்டை, மாங்காய், கடலைப்பருப்பு, கடமான், பெருங்காராமணி, மொச்சைக் வாத்து முட்டை, வாளைமீன், விறால் மீன், உளுந்தினால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்ப் பலகாரம்.
இளைப்பு நோய் குணமாக
இளைப்பு நோயுள்ளவர்கள் குளிர் காலத்தில் ரொம்பக் கஷ்டப்படுவார்கள். மூச்சுவிடத் திணறும் இவர்கள் கீழ்க்கண்ட மருந்தைத் தயாரித்து தொடர்ந்து 40-நாட்கள் சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் பூரணமாகக் குணமாகும்.
மிளகு, பிஞ்சுக் கடுக்காய், திப்பிலி, சுக்கு, வகைக்கு 30 கிராம் எடை எடுத்து வெய்யிலில் நன்றாகக் காய வைத்து, உரலில் போட்டு இடித்துத் துணியில் சலித்து எடுத்து அத்துடன் 40 கிராம் எடை அச்சு வெல்லத்தைச் சேர்த்து அம்மியில் வைத்து லேகியம் போல் அரைத்து வைத்துக் கொண்டு காலை, மாலை இரண்டு சுண்டைக்காயளவு எடுத்துச் சாப்பிட்டு கொஞ்சம் வெந்நீர் குடிக்க வேண்டும்.
இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது கீழ்க்கண்ட பொருள்களைச் சாப்பிடக்கூடாது.
இளநீர், இறால், எலுமிச்சம்பழம், கீரைத்தண்டு, கெளிற்று மீன், கொட்டை அவரைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சவ்வரிசி, அத்திப்பழம், பச்சை வாழைப்பழம், தயிர், மோர், நாரத்தம்பழம், கத்தரிக்காய், வெள்ளரிக்காய், பழையது நீராகாரம்.
மருந்து சாப்பிட ஆரம்பித்த இரண்டு வாரங்களுக்குப் பின்னரே குணம் காணமுடியும். ஆகையால் ஆரம்பத்திலேயே குணம் காணவில்லை என்று மருந்தை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
கண் பார்வை தெளிவடைய
மிதி பாகல் இலையைக் கொண்டுவந்து அதைக் கசக்கி இரண்டு துளி சாறு எடுத்து அந்தச் சாற்றில் ஒரு மிளகை உரசி படுக்கைக்குப் போகும் போது கண்ணின் இரைப்பைகளில் தடவி அது நன்றாகக் காய்ந்தபின் படுத்துத் தூங்கிவிட வேண்டும்.
மறுநாள் காலையில் வெந்நீர் விட்டுக் கழுவி விடவேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து 40 நாட்கள் செய்து வந்தால் கண்பார்வை தெளிவடையும்.
கண் பார்வை தெளிவடைய மிளகுத் தைலம்
அரைக் கிலோ நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு. அதில் 30 கிராம் மிளகைப் பசும்பால் விட்டு அரைத்துக் கலக்கி அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ச்ச வேண்டும்.
மிளகு வெந்துச் சிவந்து போனபின் பாத்திரத்தை இறக்கி வைத்து எண்ணெய் ஆறியபின் வடிகட்டி ஒரு சுத்தமான சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு சனி, புதன் கிழமைகளில் தலைக்குத் தேய்த்து தலை முழுகிவந்தால் கண்பார்வை தெளிவடையும்.
முதலில் சொன்னபடி கண்களுக்கு மருந்து போட்டு வரும்பொழுது இந்த தைலத்தைக் கொண்டு தலை முழுகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பித்த மயக்கம் தெளிவடைய
அதிக பித்தம் காரணமாக சிலருக்குக் காலை, வேளையில் தலைச்சுற்றல் ஏற்படும். சிலருக்கு வெய்யிலில் போனால் தலைச் சுற்றல் உண்டாகும். சிலருக்கு இந்த சமயம் பேச்சுத் தடுமாற்றம் ஏற்படும்.
பைத்தியம் போல ஏதாவது உளறுவார்கள். இது ஏற்பட்டவுடன் கவனித்து தக்க சிகிச்சை செய்து குணப்படுத்தாவிட்டால், புத்தி மாறாட்டம் ஏற்பட்டு பைத்தியம் ஏற்படும்.
ஆகையால், இந்த நிலையில் உள்ளவர்களுக்குக் கீழ்க்கண்ட மருந்தைத் தயார் செய்து கொடுத்து குணப்படுத்த வேண்டும்.
மிளகு, வேப்பமரத்தின் வேர்ப்பட்டை இவைகளை வகைக்கு 10 கிராம் எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு முழு வெள்ளைப்பூண்டையும் நன்றாக தட்டிப் போட்டு இரண்டு ஆழாக்களவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, இரண்டு பாகமாக செய்து ஒரு பாகத்தைக் காலையிலும் மறுபாகத்தை மாலையிலும் குடித்து விடவேண்டும்.
இந்த விதமாகத் தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட வேண்டும். இந்த சமயம் கீழ்க்கண்ட பொருள்களைச் சாப்பிடக்கூடாது.
எருமை நெய், கடலைப்பருப்பு, காராமணிப்பயிறு. சுரைக்காய், திருக்கை மீன், பலாப்பழம், பனம்பழம், பீர்க்கங்காய், புடலங்காய், புளிச்சக் கீரை, பழையது. மிதிபாகற்காய், முந்திரிப்பருப்பு, கொத்தவரைக்காய், கோதுமை, சீத்தாப்பழம், முள்ளங்கியும் அதன் கீரையும், வாள் அவரைக்காய், மடவை மீன்.
சுளுக்கு, வாய்வு பிடிப்புக் குணமாக
சில சமயம் கால், கைகளில் சுளுக்கு ஏற்பட்டுவிடும். சிலருக்கு வாய்வு காரணமாக இடுப்பில் பிடிப்பு, மூட்டுகளில் பிடிப்பு ஏற்பட்டுவிடும்.
இதனால் வலி ஏற்பட்டு அசைய முடியாத நிலைகூட உண்டாகும். சில சமயம் வாய்வுப் பிடிப்பினால் மூட்டுகளில் வீக்கம் தோன்றும். இதற்கு மிளகு நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கிறது.
வீக்கத்திற்கும், இடத்திற்கும் தேவையான அளவு மிளகை எடுத்து அதை அம்மியில் வைத்து, தண்ணீர் விட்டு, மைபோல அரைத்து ஒரு இரும்புக் கரண்டியில் போட்டு, சந்தனம் போல பதம் வரும் அளவிற்குத் தண்ணீர் விட்டுக் குழப்பி, கரண்டியை அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும்.
மருந்து ஒரு கொதிவந்ததும் இறக்கி அதில் 5 கிராம் கற்பூரத்தைத் தூள் செய்து போட்டுக் கற்பூரம் கரையும்வரை நன்றாகக் கிளறி இளஞ்சூடாக இருக்கும்பொழுதே எடுத்து வலி, வீக்கம் உள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டுவிடவேண்டும்.
காலை, மாலை பற்றை வெந்நீரினால் கழுவி விட்டு மறுபடியும் புதியதாக மருந்து தயாரித்து போடவேண்டும்.
இந்த விதமாக மூன்று நாட்கள் செய்துவந்தால் சுளுக்கு, வாய்வுப் பிடிப்புகள் பூரணமாகக் குணமாகிவிடும்.
இடுப்பு பிடிப்பு குணமாக
வாய்வு காரணமாக ஒரு சிலருக்கு அடிக்கடி இடுப்புப் பிடிப்பு ஏற்படும். இதைக் கவனியாது விட்டுவிட்டால், நிரந்தரமான இடுப்புப் பிடியாக நின்றுவிடும்.
எனவே, இவர்களுக்கு கீழ்க்கண்ட மருந்தைத் தொடர்ந்து கொடுத்துப் தானமாகக் குசாப்படுத்திவிட வேண்டும்.
மிளகு, சுக்கு, பூண்டு, பனைவெல்லம் வகைக்கு 10 கிராம் எடுத்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து. ஒரு வாயகன்ற சீசாவில் வைத்துக் கொண்டு, காலையில் மட்டும் இரண்டு கழற்சிக்காயளவு (கிராம்) சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.
இந்த விதமாக ஏழு நாட்கள் சாப்பிட்டு இடையில் ஐந்து நாட்கள் விட்டு மறுபடி தொடர்ச்சியாக ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்புப் பிடிப்பு அறவே நீங்கிவிடும். மறுபடியும் வராது.
இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது புளி சேர்க்கக் கூடாது.
சுக பேதி (சுகபேதி)
ஒவ்வொரு மனிதரும் வருடத்திற்கு இருமுறை அல்லது ஒருமுறையாவது குடலைச் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு சுகபேதி மருந்து சாப்பிடவேண்டும்.
சுகபேதிக்கு பல மருந்துகள் இருந்தாலும் இந்த மிளகு ரசம் நல்ல பேதியை உண்டு பண்ணும். உடலுக்கு நன்மை தரும்.
ஒரு கைப்பிடியளவு முடக்கத்தான் இலையைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து ஒரு சட்டியில் போட்டு லேசாக வதக்கிவிட்டு, இரண்டு ஆழாக்குத் தண்ணீரை விட்டு, தேக்கரண்டி மிளகை உடைத்துப் போட்டு,
ஒரு வெள்ளைப் பூண்டில் பாதியளவு பற்களைத் தட்டிப் போட்டு இரவில் காயமாகக் காய்ச்சி வைத்துவிட்டு காலையில் அதை வடிகட்டிக் குடித்து விட்டால் நன்றாகப் பேதியாகும் அதிக அளவில் பேதியானால் மோர் சாப்பிட்டால் நின்றுவிடும் தேவையான அளவு பேதியானவுடன் குழைந்த சாதத்தில் ரசம் விட்டுச் சாப்பிடலாம் milagu benefits in tamil.
விரை வாய்வு குணமாக
சில ஆண்களுக்கு வாய்வு காரணமாக விரையில் வீக்கம் ஏற்பட்டு வலி தோன்றும். இந்த சமயம் கீழ்க்கண்ட மருந்தை தயார் செய்து விரையில் பற்றுப் போட்டால் வீக்கம் வாடும் வலி நிற்கும்.
10 கிராம் மிளகு, தோல் நீக்கிய வெள்ளைப்பூண்டு 10 கிராம், கழற்சிப் பருப்பு 10 கிராம் இம்மூன்றையும் அம்மியில் வைத்து கோழி முட்டையின் வெள்ளைக்கருவை விட்டு, மைபோல அரைத்துக் குழப்பி விரையின் மேல் கனமாகப் பற்றுப் போடவேண்டும்.
இந்த விதமாகக் காலை, மாலை மூன்று நாட்கள் பற்றுப் போட்டால் விரை வாய்வு குணமாகும்.
நட்டுவாக்காலி விஷம் நீங்க
சாதாரணமாக நட்டுவாக்காலி தேள் போல திடீரென்று படக்கெனக் கொட்டிவிடாது.
நட்டுவாக்காலி தன் முன்பக்கக் கொடுக்கினால், காலைப் பற்றிக் கொண்டு பிறகு, சாவகாசமாக வால் பகுதியை மடக்கிக் கொட்டும். இந்த விதமாக சிலரைக் கொட்டிவிடுவது உண்டு. சிலருக்கு வாயில் நுரைத் தள்ளும். மயக்கம் வரும்.
நட்டுவாக்காலி கொட்டிவிட்டதாகத் தெரிந்தவுடன் ஒன்பது மிளகையும், தோல் உரித்த அரை வெள்ளைப் பூண்டையும் மை போல அரைத்து உடனே விழுங்கி விட்டு வெந்நீர் குடித்துவிடவேண்டும். விஷம் நீங்கிவிடும்.
பூரான் கடிக்கு
பூரான் கடித்துவிட்டால் உடலில் அங்கங்கே தடிப்புகள் தோன்றும். அரிப்பு எடுக்கும். சொரிந்தால் சிவந்து விடும் சிலசமயம் தடிப்புகள் மறைந்திருக்கும். சிலசமயம் திடீரென்று தடிப்புகள் தோன்றும், அரிக்கும்.
30 கிராம் மிளகை ஒரு பாத்திரத்தில் போட்டு அது நனைந்து நிற்குமளவிற்கு வெற்றிலைச் சாற்றை அதில்விட்டு, சுமார் ஐந்து மணி நேரம் ஊற வைத்து அதை எடுத்துக் காயவைத்து உரலில் இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரைத் தேக்கரண்டியளவு தூளுடன் சர்க்கரை சேர்த்து மூன்று நாள் சாப்பிட்டு மூன்று நாள் விட்டு மறுபடி மூன்று நாள் இந்த விதமாக 21 நாள் சாப்பிட்டால் பூரான் விஷம் குணமாகும் milagu benefits in tamil.
வெள்ளை நோய் குணமாக
வெள்ளைநோய் பெண்களையே அதிகம் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதைக் குணப்படுத்த மிளகு ஒரு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
இரண்டரை கிராம் வெள்ளெருக்கும், அதேயளவு பூண்டும், மிளகும் சேர்த்து மைபோல அரைத்து ஆழாக்குப் பசுவின் பாலில் கலந்து காலையில் மட்டும் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளை ஒழுக்கு குணமாகும்.
பற்று படை குணமாக
இதைக் குணப்படுத்த பல மருந்துகளிருந்தாலும் மிளகை உபயோகப்படுத்தியதில் நல்ல குணம் ஏற்பட்டிருக்கிறது.
தேக்கரண்டியளவு மிளகு, அதேயளவு புளியமரத்தின் இளங்கொழுந்து, கொன்னை மரத்தின் இளந்துளிர் இலை களையும், ஒரு பூண்டில் கால் பாதியளவும் சேர்த்து மைபோல அரைத்து இரவு படுக்கும் பொழுது, அந்தயிடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, இந்த மருந்தைக் கனமாகப் பற்றுப் போட்டுவிட வேண்டும். மூன்றே தினத்தில் பற்று இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தினசரி காலையில் சுட்ட சீயக்காயுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து அதைக் கொண்டு, பற்று உள்ள இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.
சிரங்கு குணமாக milagu benefits in tamil
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டுக் கருக வறுக்க வேண்டும். நன்றாக வறுபட்டபின் அதில் தீப்பொறி பறக்கும்.
மேலும், வறுத்தால் மிளகு தீப்பிடித்து நெருப்பாகும். அதை இறக்கி அப்படியே வைத்துவிட்டால் மிளகு சாம்பல் போல நீர்த்துவிடும்.
இந்த சமயம் அதை எடுத்துத் தூள் செய்து, தேங்காய் எண்ணெய் விட்டு வெண்ணெய் போல குழப்பி ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சிரங்கின் மேல் அடிக்கடித் தடவி வரவேண்டும்.
தினசரி காலையில் சுட்ட சீயக்காயையும், மஞ்சளையும் வைத்து அரைத்து அதைக் கொண்டு, சிரங்கைச் சுத்தம் செய்துவிட்டு மருந்தைப் போட்டு வந்தால் சிரங்கு சீக்கிரம் குணமாகும்.
வயிற்று உப்புசம் குணமாக
உண்ட ஆகாரம் ஜீரணமாகாத காரணத்தால் வயிற்று உப்பிசம் உண்டாகும். வயிற்று வலி உண்டாகும். வயிற்றில் இரைச்சல் உண்டாகும்.
ஒரு கிராம் மிளகு, அதே அளவு கையாந்தகரை இலையும், வெள்ளைப்பூண்டும் சேர்த்து மைபோல அரைத்து இரண்டு உருண்டைகளாகச் செய்து, முதலில் ஒரு உண்டையைப் போட்டு வெந்நீர் குடித்துவிட வேண்டும்.
மூன்றுமணி நேரத்திற்குப் பின் உருண்டையைச் சாப்பிட்டுவிட வேண்டும். வயிற்று உப்பிசம் குணமாகிவிடும்.
சீதபேதி குணமாக
சீதபேதிக்கு எத்தனையோ வகையான மருந்துகள் உண்டு. ஒருவருக்கு குணம் தரும் மருந்து மற்றொருவருக்குக் குணம் தருவதில்லை. இந்த மிளகு எல்லாவிதமான தேக நிலைக்கும் ஏற்ற சீதபேதியைக் குணப்படுத்தி விடுகிறது.
இரண்டு தேக்கரண்டியளவு மிளகை அரை ஆழாக்கு எருமைத் தயிரில் போட்டு ஆறுமணி நேரம் ஊறவைத்து, பிறகு மிளகை மட்டும் எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதே தயிரில் போட்டுக் கலக்கி, இரண்டு தேக்கரண்டியளவு நெய்யும், இரண்டு கிராம் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துக் குழப்பி காலை வேளையில் மட்டும் மூன்றுநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
இரத்தம் வருவதை நிறுத்த
காசநோய் முற்றி, இருமும் பொழுது இரத்தம் வெளிவர ஆரம்பமாகும். இந்த நிலையில் இரத்தம் வருவதை நிறுத்த மிளகு பயன்படுகிறது milagu benefits in tamil மிளகு மருத்துவ பயன்கள்.
அரை ஆழாக்கு அரிசியை ஊறவைத்து, கைப்பிடியளவு கல்யாண முருங்கை இலையையும், தேக்கரண்டியளவு மிளகையும் சேர்த்து முதலில் அரைத்துக் கொண்டு பிறகு, அத்துடன் ஊரவைத்த அரிசியையும் சேர்த்து மைபோல அரைத்து எடுத்து வாணலியில் இரண்டு தேக்கரண்டியளவு நல்லெண்ணெய் விட்டு இந்த மாவை அடைபோல தட்டி எண்ணெயில் போட்டு வெந்தபின் எடுத்து சூட்டுடன் சாப்பிடவேண்டும்.
இந்த விதமாகக் காலை, வேளையில் மட்டும் மூன்று நாள் சாப்பிட இரத்தம் வருவது நின்றுவிடும். ஆனால், பத்திய உணவை மட்டும் சாப்பிட்டு வரவேண்டும்.
நீரடைப்புக் குணமாக
நாற்பது கிராம் மிளகை எடுத்து, அதே அளவு கொட்டை நீக்கிய திராட்சைப் பழத்தையும் சேர்த்து, வாழைத்தண்டுச் சாறு விட்டு மைபோல அரைத்து, ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை இரண்டு கழற்சிக்காயளவு எடுத்துச் சாப்பிட்டு கொஞ்சம் வெந்நீர் குடிக்க வேண்டும்.
இந்த விதமாகத் தொடர்ந்து 21 நாள் சாப்பிட்டால் நீரடைப்பு, கல்லடைப்புக் குணமாகும். சிறுநீர்ப்பையிலுள்ள கல் நாளாவட்டத்தில் கரைந்துவிடும் milagu benefits in tamil மிளகு மருத்துவ பயன்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குணமாக
மிளகு, வசம்பு, சுட்டகரி, ஓமம், கருஞ்சீரகம் வகைக்கு ஒரு கிராம் எடுத்து. ஒரு சட்டியை அடுப்பில் வைத்து ஒரு கம்மாறு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு அது சிவந்து வந்தவுடன் மற்ற நான்கு மருந்துகளையும் அம்மியில் வைத்து உடைத்து அதில் போட்டு, ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.
அரை ஆழாக்களவு வரை சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டிய கக்ஷாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம், காலை, மாலை மூன்றுநாள் கொடுத்து வந்தால், நாட்பட்ட மாந்தம் கூட குணமாகும்.
தலையில் ஏற்படும் புழுவெட்டுக்கு
சிலரது தலையில் முடி நன்றாக வளர்ந்திருந்த இடத்தில் ரோமம் உதிர்ந்து வழுக்கையாகிவிடும். இதற்கு தேவையான அளவு மிளகு, அதே அளவு உப்பு, அதே அளவு வெங்காயம் மூன்றையும் சேர்த்து மைபோல அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தவறாது 40 நாள் வரை பூசிவந்தால் அந்த இடத்தில் ரோமம் முளைக்கும்.
எச்சில் தழும்பு மறைய
சிலரது முகத்தில் எச்சில் தழும்பு தோன்றி விகாரமாகக் காணப்படும். இதற்கு ஒரு கிராம் மிளகை எடுத்து, அரைகிராம் சாதிக்காயையும் சேர்த்து, ஆவாரைக் கொழுந்தின் சாறுவிட்டு மைபோல அரைத்து, அதில் பாதியளவு வெண்ணெய் கூட்டிக் குழப்பி ஒரு வாயகன்ற சீசாவில் வைத்துக் கொண்டு, இரவு படுக்கப்போகும் பொழுது அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு இந்த மருந்தைக் கனமாகப் பூசிவிடவேண்டும். இந்தவிதமாக ஐந்து நாள் செய்து வந்தால் எச்சில் தழும்பு மறைந்துவிடும்.
மூலநோய் குணமாக
நாற்பது கிராம் மிளகு, இருபது கிராம் சீரகம், வற்றலாகக் காயவைத்த கருணைக்கிழங்கு நூறு கிராம் இவைகளை நன்றாக இடித்துத் தூள் செய்து சல்லடையில் சலித்து எடுத்து, ஒருசட்டியை அடுப்பில் வைத்து,
30 கிராம் பசு நெய்விட்டு அது காய்ந்துவரும் சமயம், 30 கிராம் பனைவெல்லத்தைப் போட்டு பாகு பதமாக வரும் பொழுது சலித்து வைத்திருக்கும் தூளை போட்டுக் கிளறி இறக்கி வைத்து,
ஆறியவுடன் வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை கொட்டைப் பாக்கு அளவு எடுத்துச் சாப்பிட்டு, வெந்நீர் குடித்துவிட வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும் milagu benefits in tamil மிளகு மருத்துவ பயன்கள்.
அடிக்கடி ஏற்படும் தலைவலி குணமாக
சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு, மாத்திரைகளை விழுங்கிக் கொண்டே இருப்பார்கள்.
இந்தவிதமான தலைவலியை அடியோடு நீக்க பதினைந்து மிளகை எடுத்து, பத்து கரிசலாங்கண்ணியுடன் சேர்த்து மைபோல அரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விடாத தலைவலி வரவே வராது. தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிடவேண்டும். இடையில் விட்டுவிட்டால் குணம் காணமுடியாது.
தொண்டைக்கம்மல், வாய்வுத் தொல்லை
தொண்டைக் கம்மல், காயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் மிளகை நன்கு பொடியாக்கி 50 கிராம் எடுத்து அதனோடு 500 மில்லி நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி வடிகட்டி 25 மில்லி அளவாக மூன்று வேனை அருந்தினால் பலன் அளிக்கும்.
விஷ முறிவுத்து மிளகு மருத்துவ பயன்கள்
நம்மையும் அறியாமல் அல்லது எதிர்பாராமல் நஞ்சு தொடர்புடைய பொருள் வயிற்றுக்குள் சென்றுவிட்டால் உடனடியாக வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நச்சுப் பொருளினால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
ஆகையினால் விஷ முறிப்பாக உள்ள மிளகை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.
மிளகு 5 கிராம், கருப்பு வெல்லம் சிறிதளவு எடுத்து நன்றாகத் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
விஷபாதிப்புக்கு உட்பட்டவருக்கு இதனை வாயிலிட்டு விழுங்கள் செய்ய வேண்டும். பின்னர் தாரளமாக நீர் குடிக்கச் செய்ய வேண்டும். நீர் தாராளமாகக் குடித்தால் விஷம் முறிந்து வெளியேறிவிடும்.
விட்டுவிட்டு வருகிற காய்ச்சல்
விட்டுவிட்டு வருகிற காய்ச்சலை நீக்கிக் கொள்ள வேண்டுமாயின், மிளகு இலை, துளசி இலை, நொச்சிக் கொழுந்து, வைங்கம் ஆகியவற்றை சம எடையாக எடுத்து மெழுகாக அரைத்து எடுத்து அதில் ஒரு கிராம் வீதம் தினம் இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.
ஈறிலிருந்து இரத்தம் வருதல்
ஈறிலிருந்து இரத்தம் வடிதல், பல்வலி, சொத்தைப் பல் இதுபோன்ற குறைபாடுகளை நீக்கிக் கொள்ள, மிளகுத்தூளும், சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி பந்தால் மேற்கண்ட குறைபாடுகள் நீங்கும்.
கீல்வாதம், விக்கம்
கீல்வாத வீக்கம், சூளுக்கு ஆகியவற்றிற்கு ஒரு மேஜை கரண்டி மிளகுத் தூளில் சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுடவைத்து அதனைப் பற்றுப் போட்டால் மேற்கண்ட பிணிகள் குணமாகும் milagu benefits in tamil மிளகு மருத்துவ பயன்கள்.