அவரைக்காய் பயன்கள் avarakkai benefits in tamil அவரைக் காய் வெளிரிய பச்சை, ஊதா என இருநிறங்களில் கிடைக்கிறது. இருப்பினும் இதனால் கிடைக்கம் சத்துகள் ஒன்றாகும். அவரைக்காயில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சத்துகளும் தேவையான அளவு இருக்கிறது. பிஞ்சு அவரைக் காயைப் பத்தியத்திற்குப் பயன்படுகிறது.
அவரைக் காயை , சாம்பார் , காரக்குழம்பு, பொரியல், கூட்டு என்று எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தி உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். அவரைக்காயைப் பயன்படுத்துவதினால் குடல் வலுப்பெறுகிறது. பசியைத் தூண்டுகிறது. பித்தத்தைச் சரிசெய்கிறது.
இதில் நார்ப்பொருள் அதிகமாக இருப்பதினால் மலச்சிக்கலையும் போக்குகிறது. உடல் வலிமையை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.