கம்பு பயன்கள் | Benefits of Rye In Tamil


Kambu benefits in tamil : 
கம்பு இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. கம்பின் விளைச்சல் காலம் 3 முதல் 6 மாதகால ஆகும். கம்பு பல காலமாக நாம் சாப்பிட்டு வந்த ஓன்று. கடந்த 5 ஆண்டுகளாக நாம் ஒதுக்கி வைத்து விட்டோம் அதனால் இன்று பல நோய்களால் பாதிக்கப்படுகிறோம்.

சிறு தானியங்களில் கம்பு என்பது மிக முக்கியமானது. கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை, கம்பு அடை என பலவிதமான ரெசிபிகள் வீட்டில் பெரியவர்கள் செய்வார்கள்.

சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வேதிப்பொருள்களும் வைட்டமின்களும் அளவிட கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது. வெள்ளை அரிசிகளை 8  மடங்கு இரும்பு சத்து காம்பில் உள்ளது.

கம்பு பயன்கள் – Kambu benefits in tamil

  • கம்பை உணவாக சாப்பிட்டால் ஏற்படும் பயன்கள் கீழே காணலாம்.
  • கம்பை கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது மற்றும் தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து பலத்தைக் கொடுக்கும்.
  • நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமாக இருக்கிற அரிசி சத்தத்தை சாப்பிட முடியாது அவர்கள் கம்பை கூழ் களி மற்றும் தோசை செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் மற்றும் உடல் ஆரோக்கிமாகும்.
  • கம்பு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
  • கம்பில் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்டு இருப்பதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சில காலம் கம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கிவிடும்.
  • அதிக எடை உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை குறைத்து சரியான நேரத்தில் பசி எடுக்க வைக்கிறது.
  • குடல் புற்று நோய்கள் உள்ளவர்கள் கம்பை சாப்பிட்டு வந்தால் குடல் புற்று நோய் குணமாகும்.
  • கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வரும் நபர்களின் இரத்தத்தில் உள்ள செல்களின் பிராண வாயு உபயோகிப்பை அதிகரிக்க செய்து அவர்களின் தோலின் சுருக்கத்தை குறைத்து தோலின் நிறம் நன்கு பளபளப்பாகும் இதனால் முதுமையை தள்ளி வைத்துக் கொள்ளலாம்
  • புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் கம்பு சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் சில சமயங்களில் அதிக இரத்த போக்கும் அடி வயிற்று வழியும் வரும் இந்த நேரத்தில் இளஞ்சூடு கம்பு கூல் குடித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்.
  • கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
  • கம்பில் புரத சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிர்வில் இருந்து விடுபடலாம்.
  • கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைக்கிறது.
  • இரத்த சோகை உள்ளவர்கள் வாரத்திற்கு 3 நாள் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும்.

கம்பு தீமைகள்

  • கம்பை தொடர்ந்து சாப்பிட கூடாது ஏனென்றால் கம்பு சாகுபடிக்கு குறைந்த அளவு தான் ஆகும்.
  • காம்பை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி, வீக்கம் போன்றவற்றை வர கூடும்.
  • கம்பு மட்டுமே ஒரே உணவாக எடுத்து வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் தைராய்டால் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.
  • தினமும் கம்பு அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அயோடின் குறைபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளது Kambu benefits in tamil.

கம்பு கூழ் செய்முறை

  • கம்பு மண்பானையில் செய்வது நல்ல பலனைத் தரும்.
  • தேவையான அளவு காம்பை எடுத்து கொள்ளவும்.
  • பின்னர் தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்தி வெயிலில் காய வைக்கவும்.
  • சுத்தம் செய்த காம்பை மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
  • ஒரு கப் கம்புக்கு 6 கப் தண்ணீர் உதவும்.
  • 6 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
  • கொதித்த  தண்ணீரில் அரைத்து வைத்த கம்பை போட வேண்டும்.
  • பின் நன்கு கொதிக்க வேண்டும் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளலாம்.
  • நன்கு வேக வைத்த பின் இறக்கி விடவும்.
  • பின் தேவையான அளவு தயிரை விடவும்.
  • பின் தேவையான அளவு வெங்காயம் சேர்த்து கொள்ளலாம்.
  • மிதமான சூட்டோடு உட்கொள்ள வேண்டும்.

தானியங்களின் வகைகள்

தானியங்கள் 7 வகைப்படும் அவற்றை பின்வருவனவற்றில் பார்க்கலாம்

1.கம்பு

2.தினை

3.வரகு

4.குதிரைவாலி

5.சாமை

6.கேழ்வரகு

7.சோளம்

மேற்கண்ட ஏழு திணைகளும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தர வல்லமைக் கொண்டது.

கம்பில் உள்ள சத்துக்கள்

தானியங்களில் அதிக அளவாக கம்பில் தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண் பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏ வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு,

  • 42 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது.
  • 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
  • பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
  • ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
  • நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

கம்பு பயன்கள் வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்

Leave a Comment