கறிவேப்பிலை பயன்கள் | Curry Leaves Benifits In Tamil

கறிவேப்பிலை பயன்கள் karuveppilai benefits in tamil கறிவேப்பிலை வகையைச் சேர்ந்தது அல்ல. கறிவேப்பிலையைத் தனிப்பட்ட முறையில் சமைத்துச் சாப்பிடுவதில்லை. கறிவேப்பிலையைத் துகையல் செய்து சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால், கறிவேப்பிலை இல்லாமல் செய்யப்படும் சமையல் மணமற்றதாகவே இருக்கும். குழம்பு, கூட்டு, பொரியல், ரசம் இவைகளில் கறிவேப்பிலைச் சேர்க்காவிட்டால் அவை மணத்துடன் இருக்காது curry leaves benefits in tamil.

தினசரி அட சமையலுக்கு கறிவேப்பிலை இன்றியமையாத பொருளாக இருந்து வருகிறது. நாம் உணவு சாப்பிடும் பொழுது பதார்த்தத்தில் உள்ள கறிவேப்பிலையை அலட்சியமாகத் தூக்கி எறிந்து விடுகிறோம்.

கறிவேப்பிலையில் எவ்வளவு உயிர்ச்சத்து தெரியுமா? சக்தி வாய்ந்த இந்த கறிவேப்பிலையின் அருமை தெரியாமல் நாம் அதை அலட்சியமாகத் தூக்கி எறிந்து விடுகிறோம். அதன் அருமை தெரிந்திருந்தால் அதைக் கீழே போட மாட்டோமென்று விழுங்கி அதன் பலனைப் பெறுவோம்.

அதைப் பதார்த்தங்களுடன் வாசனைக்காகச் சேர்க்கின்றனரே தவிர, அதன் சக்தியை தமது உடல் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல. கறிவேப்பிலையிலுள்ள உயிர்ச்சத்துக்கள் என்னென்ன வென்பதை ஒவ்வொருவரும் அறியாததே இதற்கு முக்கிய காரணமாகும்.

சமையலில் முக்கியப் பங்கு வகிப்பது வேப்பிலையாகும். கறிவேப்பிலை கறி கறிவேப்பிலையை மணத்திற்காக அடங்கியுள்ளதை அறியமாட்டார்கள். உபயோகப்படுத்துகின்றவர்கள் அதில் மருத்துவக் குணம் கறிவேப்பிலையில் வைட்டமின் ‘A’ சத்து மிக அதிகமாக உள்ளது.

அத்துடன் சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் அடங்கியுள்ளது. கண்களுக்கு வலிமை தருவது ‘A’ சத்தாகும். ஆகையினால் இதனை சட்னியாக தயார் செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டால் கண் சம்பந்தமான எந்த நோயும் அகன்று விடும்.

20 கிராம் எடையுள்ள உயிர்ச்சத்து கறிவேப்பிலை பயன்கள்

  • வைட்டமின் A உயிர்ச்சத்து 1580 மில்லிகிராமும்,
  • வைட்டமின் B1 உயிர்ச்சத்து 23 மில்லிகிராமும்,
  • B2 வைட்டமின்  உயிர்ச்சத்து 59 மில்லிகிராமும்,
  • வைட்டமின் C உயிர்ச்சத்து 1 மில்லிகிராமும்,
  • சுண்ணாம்புச் சத்து 230 மில்லிகிராமும்,
  • இரும்புச் சத்து 0.9 மில்லிகிராமும் இருக்கிறது.
  • இதன் காலரி என்னும் உஷ்ண அளவு 28.

கறிவேப்பிலை பயன்கள் (karuveppilai benefits in tamil)

கண் பார்வை

பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். கண், பல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும். வயோதிகக் காலத்திலும் கண் பார்வை மங்காது. உடல் கட்டுத் தளராது. அகத்திக் கீரைக்கு அடுத்தப்படியாக அதிகச் சுண்ணாம்புச் சத்துள்ளது கறிவேப்பிலை ஒன்றுதான்.

கறிவேப்பிலை பல வியாதிகளைக் குணப்படுத்தும் அருமருந்தாக இருந்து வருகிறது.

சீதபேதி குணமாக

கறிவேப்பிலையைச் சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து எடுத்து அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து, அரை ஆழாக்களவு எருமைத் தயிரில் போட்டுக் கலக்கிக் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் சீதபேதி குணமாகும்.

எந்தவிதமான காய்ச்சலும் குணமாக கைப்பிடியளவு கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அத்துடன் தேக்கரண்டியளவு சீரகமும், அரைத் தேக்கரண்டியளவு மிளகும் சேர்த்து வெந்நீர் விட்டு மைபோல அரைத்து,

அதை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பங்கு மருந்தை எடுத்து, அத்துடன் தேக்கரண்டியளவு இஞ்சிச் சாறும், அரைத்தேக்கரண்டி அளவு தேனும், கூட்டிக் குழைத்துக் காலையில் கொடுத்து, மறுபாதி மருந்தை இதே போல சாயந்திரம் கொடுத்து விட வேண்டும்.

தேவையானால் கொஞ்சம் வெந்நீர் குடிக்கக் கொடுக்கலாம். இந்தவிதமாக மூன்று நாள் கொடுத்து வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.

சீதபேதி, வயிற்று வலியுள்ளவர்கள் பச்சையாக அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் நோய் விரைவில் அகன்றுவிடும்

வயிற்றுப்போக்கு குணமாக

உஷ்ணம், அஜீரணம், வாயு காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால் கறிவேப்பிலையைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து அத்துடன் அந்த அளவில் நான்கில் ஒரு பங்கு சீரகத்தையும் சேர்த்து மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டு கொஞ்சம் வெந்நீர் குடிக்க வேண்டும்.

மருந்து தின்ற அரைமணி நேரம் கழித்து தேக்கரண்டியளவு சுத்தமான தேனையும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக காலை, மாலை இருவேளையாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நின்று விடும்.

அரோசிகம் போக்க

அரோசிகம் என்பது நாக்கு ருசியறியாமலிருக்கும் நிலையைக் குறிக்கும். இதை மாற்ற கறிவேப்பிலை, மருந்து போல வேலை செய்யும். அரோசிக நில ஏற்பட்டிருக்கும் பொழுது தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து அம்மியில் வைத்து,

அத்துடன் இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், புளி, உப்பு இவைகளைத் தேவையான அளவு சேர்த்து மைபோல் அரைத்து, சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் கொட்டைப்பாக்களவு துகையலைச் சுடுசாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு விட வேண்டும். இந்த வகையில் முன்னேறவேளைச் சாப்பிட்டால் போதும் அரோசிகம் மாறிவிடும்.

பைத்தியம் தெளிய

பித்தம் காரணமாக புத்திமாறாட்டம் ஏற்பட்டு எதையாவது பேசிக்கொண்டே இருப்பவர்களுக்கு புத்தித் தெளிவடைய கறிவேப்பிலை நன்கு பயன்பட்டு வருகிறது கறிவேப்பிலை பயன்கள் karuveppilai benefits in tamil.

கறிவேப்பிலையை துகையலாக அரைத்து, அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அந்தச் சாற்றையும் அதில் சேர்த்துக் குழப்பி சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இந்த விதமாக பகல், இரவு சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பைத்தியம் தெளியும். அறிவு தெளிவடைந்து நன்றாகப் பேசுவார்கள்.

கண்கட்டி குணமாக

கோடைக் காலத்தில் உஷ்ணம் காரணமாக கண் இரப்பையின் மேல் சிறிய கட்டிகள் கிளம்பும். இது சீழ் கோர்த்து பெரியதாக மாறும் பொழுது அதிக கஷ்டத்தைக் கொடுக்கும்.

எனவே இந்தக் கட்டி ஆரம்பமானவுடனேயே, கறிவேப்பிலையைத் தட்டிச் சாறு எடுத்து, அந்தச் சாற்றைக் கொண்டு, வெண்ணிறச் சங்கை உரைத்து, அதை வழித்து கட்டியின் மேல் கனமாகப் பற்றுப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து விடும்.

உடைந்த பின்னும் அதையே போட்டு வந்தால் புண் ஆறிவிடும். கறிவேப்பிலை வகையில் காட்டு கறிவேப்பிலை என்ற ஒரு வகை உண்டு.

இது காட்டில் இரண்டடி மூன்றடி உயரம் வரை வளர்ந்திருக்கும்.இந்தக் கறிவேப்பிலையும், வாசனையாகவே இருக்கும். இருந்தாலும் இதை எந்த வகைக்கும் உபயோகப்படுத்துவதில்லை.

வயிற்று வலி குணமாக – curry leaves benefits in tamil

சீதபேதி மற்றும் வயிற்றுவலி உள்ளவர்கள் கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் நோய் விரைவில் குணமாகும்.

காய்ச்சல்

ஜலதோஷம் காரணமாகக் காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், கறி வேப்பிலையுடன் சிறிது மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டை செய்து வாயில் போட்டு வெந்நீர் குடித்தால் காய்ச்சல் விரைவில் குணமாகும்.

பித்தம்

கறிவேப்பிலையைச் சாப்பிட்டால் வாந்தி பித்தம் நீங்குவதுடன் கல்லீரல், மண்ணீரல், ஜீரணப்பைகள் வலிமை பெறுகின்றன கறிவேப்பிலை பயன்கள் karuveppilai benefits in tamil.

Leave a Comment